Showing posts with label இஸ்லாம். Show all posts
Showing posts with label இஸ்லாம். Show all posts

Wednesday, May 19, 2010

நீல நிற இரத்தம் பம்பும் இதயமொன்று…



by:FM அஸ்லம் (ரஜரட்டை மருத்துவபீடம்) aslamaumsa@gmail.com

‘எவர் ஆத்மாவாகிய அதை பரிசுத்தமாக்கிக் கொண்டாரோ அவர் திட்டமாக வெற்றி பெற்றுவிட்டார்.’ (அல்குர்ஆன் 91:9)


மார்ச் மாதம் 23ம் திகதி திங்கட்கிழமை காலை அநுராதபுரம் போதனா வைத்தியசாலை சிறுவர் விடுதியில் அனுமதிக்கப்பட்டடுள்ள குழந்தைகளை பரிசீலித்துக்கொண்டு செல்லும் போதுஇ 12ம் இலக்கக் கட்டிலில் ஏழு மாதம் நிரம்பிய அழகான பெண் குழந்தையொன்று உழைத்துக் களைத்த மனிதன் உறங்குவது போன்று உறங்கிக்கொண்டிருந்தது. மேலும் குழந்தையின் இரு உதடுகளும் மற்றும் கால்இ கைகளிலுள்ள நகங்களும் நீல நிறச்சாயம் பூசி அலங்கரிக்கப்பட்டிருப்பது போன்று நீல நிறமாக மாறியிருந்தது.

அருகில் இருந்த தாயிடம் குழந்தையின் நோய் பற்றி வினவிய போது கடந்த சில தினங்களாக முன்னரை விட கடுமையாக குழந்தை சோர்வடைந் திருப்பதாகவும் பால் குடிக்க முடியாமல் திணறி அழுவதாகவும் மற்றும் அழும்

போது உடல் முழுவதும் நீல நிறமாக மாறுவதாகவும் கூறியபடி குழந்தையின் தலையணைக்குக்கீழ் இருந்து 2 கொப்பிகளையும் எழுதப்பட்ட சில தாள்களையும் எடுத்து நீட்டி குழந்தைக்கு இதய நோய் இருப்பதாகவும் அதற்காக குழந்தையை இரு மாதத்திற்கு ஒரு முறை கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் போதனா வைத்தியசாலைக்கு கிளினிக்குக்காக அழைத்துச் செல்வதாகவும் கடைசியாக சென்ற கிளினிக்கில் குழந்தைக்கிருக்கும் நோயை சத்திர சிகிச்சை செய்து மாத்திரமே குணப்படுத்த முடியும் எனவும் பெரிய வைத்தியர் கூறிவிட்டார் என்று முற்றாக கூறி வார்த்தைகள் வராமல் விம்மலுடன் முடித்தார்.

கருவாக இருந்த காலத்தில் இக்குழந்தையின் இதயம் விருத்தியடையும் போது ஏற்பட்ட ஒரு சிறு விபத்தினால் சாதாரண இதயத்தின் அமைப்பில் நின்றும் வேறுபட்ட பல குறைபாடுகளுடன் கூடிய இவ்விதயத்தினால் இக்குழந்தையின் உயிருக்கு ஏற்படும் பாதிப்புக்கள் பற்றி அலசுவதற்கு முன்னர் சாதாரண இதயம் எவ்வாறு ஒழுங்கமைக்கப் பட்டிருக்கிறது மற்றும் அது எவ்வாறு தொழிற்படுகின்றது என்று முதலில் நோக்குவோம்.

சாதாரண ஒரு மனித இதயத்தின் அமைப்பை நோக்கும் போது அது மேற்புறமாக இரண்டு சோனை யறைகளும் கீழ்புறமாக இரண்டு இதயவறைகளுமாக நான்கு அறைகளால் ஆக்கப்பட்டுள்ளது. இரண்டு சோனையறைகளும் ஒன்றுக்கொன்று தொடர்புறாத வகையில் சோனையறை பிரிசுவரால் இதயவறைகளும் பிரிக்கப்பட்டுள்ளன. ஒரே பக்கமாக அமைந்துள்ள இதயவறைகளும் சோனையறைகளும் கதவு போன்று திறந்து மூடக்கூடிய வால்பு மூலம் தொடர்புருகின்றன.

வலது சோனையறையினுள் மேற்பெருநாளம் கீழ்பெருநாளம் எனும் இரு பெரிய நாளங்களும் இடது சோனையறையினுள் நான்கு சுவாசப்பை நாளங்களும் திறக்கின்றன. மற்றும் வலது இதயவறையிலிருந்து ஒரு சுவாசப்பை நாடி உதித்து இரண்டாகப் பிரிந்து இரண்டு சுவாசப் பைகளையும் சென்றடைகின்றது. அதேபோல் இடது இதயவறையில் இருந்து தொகுதிப் பெருநாடி எனும் ஒரு பெரிய நாடி உதித்து அதிலிருந்து பல வகையான கிளை நாடிகள் தோன்றி தலை கை கால் உட்பட உடலின் எல்லாப் பாகங்களுக்கும் குருதியை வினியோகிப்பதற்காக சென்றடைகின்றது.

உடலின் மேற்பகுதியால் பயன்படுத்தப்பட்ட ஒட்சிசன் குறைவான நிலையில் உள்ள குருதி மேற்பெருநாளத்தினூடாகவும் உடலின் கீழ்பகுதியால் பயன்படுத்தப்படு ஒட்சிசன் குறைவான நிலையில் உள்ள குருதி கீழ்பெருநாளத்தினூடாகவும் வலது சோனையறையினுள் ஊற்றப்படுகின்றது. பின்னர் வலது சோனையறை சுருங்கும் போது அதற்குள் வந்தடைந்த குருதி முழுவதும் வால்பின் உதவியினூடாக வலது இதயவறைக்குள் மாற்றப்பட்டு பின்னர் வலது இதயவறை சுருங்கும் போது அங்கிருந்து குருதியானது சுவாசப்பை நாடியினூடாக சுவாசப்பைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு நாம் சுவாசிப்பதன் மூலம் வளிமண்டலத்திலிருந்து உள்ளெடுக்கப்பட்டு சுவாசப்பையை (நுரையீரலை) அடையும் ஒட்சிசனில் கரைக்கப்பட்டு விளைவாகும் ஒட்சியேற்றப்பட்ட குருதி சுவாசப்பையிலிருந்து நான்கு சுவாசப்பை நாளங்களுடாக இடது சோனையறையை அடைந்து அங்கிருந்ந பின்னர் வால்பினுடாக இடது இதயவறையை அடைகின்றது.

ஒட்சியேற்றப்பட்ட குருதி இடது இதயவறையை வந்தடைந்த பின்னர் அது சுருங்க ஆரம்பித்து சுருங்கும் போது தொகுதிப் பெருநாடியினூடாக அவ் ஒட்சியேற்றப்பட்ட குருதி உடலின் எல்லாப்பாகங்களுக்கும் சென்றடைவதால் உடலில் உள்ள 60 ரில்லியனுக்கும் மேற்பட்ட கலங்களும் இவ் ஒட்சிசனைப் பயன்படுத்தி சக்தியை உருவாக்குவதன் மூலம் எம்மை சுறுசுறுப்பாக இயங்க வைக்கின்றது.

இதனால் தான் விபத்துக்கள் மற்றும் பல காரணங்களாள் சுயநினைவிழந்து அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் சுவாசப் பாதையில் ஏதாவது அடைப்புகள் ஏற்பட்டு சுவாசம் தடைப்படுகின்றதா? மற்றும் சுவாசம் ஒழுங்காக நடைபெறுகின்றதா? என்பனவே முதன்முதலாக பரீட்சிக்கப்படும் அளவுக்கு ஒட்சிசன் தேவையானது உடலுக்கு மிக இன்றியமையாததாகும்.

முளையமானது கருப்பையில் உட்பதிக்கப்பட்டு நான்கு வாரங்களின் பின்னர் நிகழும் மடாதல் எனும் செயற்பாட்டின் மூலம் இதயம் விருத்தியடையத் தொடங்கும். இதன் போது இரண்டு இதயவறைகளையும் பிரித்து உருவாகும் இதயவறைப் பிரிசுவரின் மேற்பகுதி சற்று முன்பின்னாக்கி விலகுவதால் இதயவறைகள் முற்றாக பிரிக்கப்படாமலும் தொகுதிப்பெருநாடி வலது சோனையறைக்குள் உட்செல்லும்.

சுவாசப் பைநாடி சற்று நெருக்கப்பட்டு அதன் விட்டம் குறைவடைந்தும் மற்றும் விட்டம் குறைவடைந்து காணப்படும் நாடியினூடாக குருதியை பம்புவதற்கு அதிக விசையைப் பிரயோகிப்பதற்காக வலது இதயவறை சற்றுத் தடித்தும் பெரிதாகியும் காணப்படும்.

கிரேக்கத்தில் நான்கைக் குறிப்பதற்காக Tetra எனும் சொல் பயன்படுத்தப்படுகின்றது. இதனால்தான் சாதாரண இதயத்தில் இருந்தும் வேறுபட்ட மேற்கூறப்பட்ட நான்கு குறைபாட்டைக் கொண்ட இவ்விதயத்திற்கு Tetrology of fallot எனப் பெயரிடப்பட்டிருக்கின்றது.

இவ்வாறான குறைபாட்டினால் வலது இதயவறையை வந்தடையும் ஒட்சியேற்றப்படாத குருதியின் ஒரு பகுதி வலது இதயவறை சுருங்கும் போது சுவாசப்பைக்குச் சென்று ஒட்சியேற்றப்படாமலேயே வலது இதயவறையினுல் உட்புகுந்து காணப்படும் தொகுதிப் பெருநாடியினூடாக செல்வதனால் ஒட்சிசன் வருகையை எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கும் உடற்கலங்களுக்கு தாகம் தீர்க்க முடியாமல் ஏமாற்றத்தை அளிக்கின்றது.

இவ்வாறான ஒட்சிசன் தட்டுப்பாட்டினால் ஏழு மாதமாகியும் இன்னும் சுயமாக இருக்க முடியாதளவுக்கு இக்குழந்தையின் வளர்ச்சி குறைவடைந்திருப்பதுடன் மேலும் இக்குழந்தை வளரும் போது அதிகளவு ஒட்சிசன் தேவைப்படுவதாலும் இத்தேவைக்கேற்ப ஒட்சிசன் வழங்க முடியாமல் இதயம் திணறுவதால் பூப்படைதல் உட்பட குழந்தையின் எல்லா வளர்ச்சி கட்டங்களும் தாமதமாகியே நடைபெறும்.

மற்றும் இவ்வாறான குழந்தைகள் மற்ற குழந்தைகளுடன் விளையாடும் போது தொடர்ச்சியாக விளையாட முடியாமல் உடல் முழுவதும் நீல நிறமாகி இடைநடுவிலேயே ஓரமாகி ஓய்வெடுத்துக் கொள்ளும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக்குழந்தையை முகங்குப்பற படுக்கப் (Knee – Chest position)போடுவதன் மூலம் பகுதியான சிறிதளவு நிவாரணமும் கிடைக்கின்றது.

இக்குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்காக தொடையிலிருந்து ஒரு நாளம் வெட்டி எடுக்கப்பட்டு அதனால் சுவாசப்பை நாடியும் தொகுதிப் பெருநாடியும் இணைக்கப்பட்டு அவற்றிற்கிடையே தொடர்பு ஏற்படுத்தப் படுகின்றது. இதனால் தொகுதிப் பெருநாடியினூடாக செல்லும் ஒட்சிசன் அகற்றப்பட்ட குருதி சுவாசப்பை நாடியினுல் மாற்றப்பட்டு சுவாசப்பை நாடியினூடாக சுவாசப் பையினுல் எடுக்கப்பட்டு ஒட்சியேற்றி அனுப்பபடும் இச்சத்திர சிகிச்சை Blalock – Taussig Shunt என அழைக்கப்படுகிறது.

பல இலட்சங்கள் செலவு செய்து செய்யப்படும் இச்சத்திர சிகிச்சையின் போது துரதிஷ்டவசமாக இதயத்துடன் மருவிச் செல்லும் நரம்புகள் (Phrenic nerve) இதயச் சுவாசத்துக்கான சமிக்ஞைத் தொகுதி (conducting systerm) என்பன சத்திர சிகிச்சை நிபுணரின் (surgeon) கத்தியில் அகப்படும் போது மரணம் கூட சம்பவிக்கக் கூடும்.

பிறக்கும் பத்தாயிரம் குழந்தைகளில் பத்துக் குழந்தைகள் இவ்வாறான குறைபாட்டுடன் பிறப்பதாகவும் அந்தப்பத்துக்குள் எம்மையும் உள்ளடக்காமல் எந்தக் குறையுமின்றி வடிவத்தில் அழகாக அமைத்திருந்தும் இன்று நாம் அதை பொறாமை பெருமை தலக்கணம் ஆணவம் போன்றவைகள் குடியிருக்குமிடமாக மாற்றி எம்மிதயத்தை மாசுபடுத்திக் கொண்டிருக்கின்றோம்.

‘அதைத் தூய்மைப்படுத்துகிறவர் வெற்றி பெற்றார்.’ (அல்குர்ஆன்- 91:9)

‘உடலில் ஒரு சதைத் துண்டு இருக்கிறது. அது சீர் பெற்றுவிட்டால் உடல் முழுவதும் சீர் பெற்றுவிடும். அது சீர்குலைந்துவிட்டால் முழு உடலும் சீர்குலைந்து விடும். அறிந்துகொள்ளுங் கள் அதுதான் இதயம். என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் கூறினார்கள்.

‘(அறிவிப்பவர்: நுஅமான் பின் பஷீர் (ரழி) நூல்: ஸஹீஹுல் புஹாரி-52)

இறைவன் ஒரு விடயத்தை கூறுவதற்கு சத்தியம் செய்ய வேண்டும் என்று அவசியமில்லை. எனினும் ஸூரத்துல் ஸம்ஸ் எனும் அத்தியாயத்தில் 7 சத்தியங்கள் செய்து விட்டு அதற்கடுத்ததாக மேலேயுள்ள வசனத்தை கூறுகின்றானெனில் அவ்வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாக அமைந்துள்ளது.

இங்கு கூறப்பட்டிருக்கும் உளப்பரிசுத்ததின் முக்கியத்துவத்தை இன்று எம்மில் பெரும்பாலான வணக்கவாளிகள் கூட கவனத்தில் கொள்ளாமல் அமல்கள் மாத்திரமே எம்மை சுவனம் கொண்டு செல்ல போதுமானது என்ற போர்வையில் உளப்பரிசுத்தம் எனும் பெரும்பகுதியே கவனத்திற் கொள்ளமல் அதைக் கலங்கப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

இதற்கு சிறந்த ஒரு சான்றாக நபி (ஸல்) அவர்கள் எல்லாவற்றின் மீதும் நல்லெண்ணம் வைத்த சாதாரண ஒரு வணக்கவாளியை சுவர்க்கவாசி என அடையாளப் படுத்தியதுடன் அவர்களும் உளத் தூய்மையை வேண்டி அதிகமதிகம் ஒவ்வொரு தொழுகையிலும் பின்வருமாறு பிரார்திப்பார்கள்.

‘நீயே உள்ளங்களின் தலைவனாகவும் அதனை தூய்மைப்படுத்துபவனாகவும் இருக்கின்றாய். எனது உள்ளத்தை தூய்மைப்படுத்துவாயாக’ (ஸஹிஹுல் புஹாரி)

இன்று எமது உள்ளங்கள் எடுத்ததற்கெல்லாம் சந்தேகப்படுவதும் அடுத்தவரை இழிவாகக் கருதுவதும் அடுத்தவர் மீது தப்பெண்ணம் கொள்வதும் அடுத்தவர்களின் வெற்றியை நமது தோல்வியாகவும் அடுத்தவரின் தோல்வியை தமது வெற்றியாகவும் கருதி நல்லதை நினைப்பதை விட்டும் திசைதிருப்பப்பட்ட உள்ளங்களாக மாறியிருக்கிறது.

இறைவா எங்கள் இதயத்தை அமைப்பிலும் தொழிற்பாட்டிலும் எந்தக் குறையுமின்றி அமைத்த நீயே அதைத் தூய்மைப்படுத்தக் கூடியவனாகவும் இருக் கின்றாய் ஆகையால் எங்களுடைய இதயங்களையும் தூய்மைப்பபடுத்தி அதனை செயற்பாட்டு ரீதியில் அசுத்தப்படுத்தும் கூட்டத் திலிருந்தும் எங்களைப் பாதுகாத்தருள்வானாக!

நன்றி : http://dharulathar.com

Monday, May 17, 2010

திருக்குர்ஆன் மீதான விமர்சனங்களும் விளக்கங்களும்!

பைபிளைப் பற்றி முஸ்லீம்களால் எடுத்து வைக்கப்படும் நியாயமான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க முடியாமல் திணரும் கிறிஸ்தவர்கள், பதிலுக்கு திருக்குர்ஆனிலும் தவறுகள் உள்ளது என்று எழுதத் தொடங்கியுள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக, திருக்குர்ஆனில் சரித்திரத் தவறுகள் இருப்பதாகவும், நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் பைபிளைப் பார்த்து காப்பி அடித்து எழுதிக்கொண்டிருக்கும் பொழுது கவனக்குறைவாக பல தவறுகளை இழைத்துவிட்டதாகவும், அதை இவர்கள் கண்டுபிடித்துவிட்டது போன்று, தற்போது எழுதத் தொடங்கியுள்ளனர். அதன் வெளிப்பாடாகத்தான் சமீபத்தில் ‘குர்ஆனில் சரித்திரத் தவறு – மரியால் ஆரோன் மற்றும் மோசேயின் சகோதரியா?’ என்ற கருத்தை உள்ளடக்கிய ஒரு கட்டுரை தமிழில் மொழிப்பெயர்த்து கிறிஸ்தவ தளங்களில் வெளியிடப்பட்டது.

குர்ஆனின் மீது குற்றம் சாட்டப்படும் அந்த கட்டுரையின் தொடக்கத்திலேயே பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது:

மேரியை (இயேசுவின் தாய்) ஆரோனுடைய, மோசேயுடைய சகோதரியாக சொல்லப்பட்டிருக்கின்றது. (மேரி- எபிரேய மொழியில் மிரியாம் – குர்-ஆனில் மர்யம்)

இயேசுவினுடைய காலத்திற்கும், மோசேயினுடைய காலத்திற்கும் இடையில் உள்ள இடைவெளி 1400 வருடங்களுக்கு மேல். குர்-ஆனை எழுதிய அல்லாவிற்கு இது எப்படி தெரியாமல் இருந்தது ?

இந்த குற்றச்சாட்டிற்கு ஆதாரமாக பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களை சமர்ப்பிக்கின்றார் அந்த கிறிஸ்தவ நன்பர்:

3:35 இம்ரானின்(அம்ராம்) மனைவி ‘என் இறைவனே! என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணிக்க நான் நிச்சயமாக நேர்ந்து கொள்கிறேன். எனவே (இதை) என்னிடமிருந்து நீ ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீ யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றாய்’ என்று கூறியதையும்-

3:36 (பின், தான் எதிர்பார்த்ததற்கு மாறாக) அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றதும்: ‘என் இறைவனே! நான் ஒரு பெண்ணையேபெற்றிருக்கிறேன்’ எனக் கூறியதையும் நினைவு கூறுங்கள். அவள் பெற்றெடுத்ததை அல்லாஹ் நன்கறிவான். ஆண், பெண்ணைப் போலல்ல (மேலும் அந்தத்தாய் சொன்னாள்:) ‘அவளுக்கு மர்யம் என்று பெயரிட்டுள்ளேன். இன்னும் அவளையும், அவள் சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானி(ன் தீங்குகளி)லிருந்து காப்பாற்றத் திடமாக உன்னிடம் காவல் தேடுகின்றேன்.

66:12 மேலும், இம்ரானின் புதல்வியான மர்யமையும் (அல்லாஹ் உதாரணமாக்கினான்) அவர் தம் கற்பைக் காத்துக் கொண்டார் நாம் (அவரில்) நம் ரூஹிலிருந்து (ஆத்மாவிலிருந்து) ஊதினோம். மேலும், அவர் தம் இறைவனின் வார்த்தைகளையும், அவனுடைய வேதங்களையும் மெய்ப்பித்தார் – (ஏற்றுக் கொண்டார்) இன்னும், அவர் (அல்லாஹ்வை வணங்கி) வழிபட்டவர்களில் ஒருவராகவும் இருந்தார்.

19:27 பின்னர் (மர்யம் – மேரி) அக்குழந்தையைச் சுமந்து கொண்டு தம் சமூகத்தாரிடம் வந்தார். அவர்கள் கூறினார்கள்: ‘மர்யமே! நிச்சயமாகநீர் ஒரு விபரீதமான பொருளைக் கொண்டு வந்திருக்கிறீர்!’

19:28 ‘ஹாரூனின் (ஆரோன்) சகோதரியே! உம் தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை. உம் தாயாரும் நடத்தை பிசகியவராக இருக்கவில்லை’ (என்று பழித்துக் கூறினார்கள்).

இந்த குர்ஆன் வசனங்களின் மூலம் அந்த கிறிஸ்தவர் கண்டுபிடித்த அபாரமான (?) கண்டுபிடிப்பின் முடிவை பின்வருமாறு தெரிவிக்கின்றார்:

விளக்கம்:

யாத்திரயாகமம் 15:20 ஆரோனின் சகோதரியாகிய மிரியாம் என்னும் தீர்க்கதரிசியானவளும் தன் கையிலே தம்புரை எடுத்துக்கொண்டாள். சகல ஸ்திரீகளும் தம்புருகளோடும் நடனத்தோடும் அவளுக்குப் பின்னே புறப்பட்டுப்போனார்கள்.

என்ன நடந்திருக்கின்றது என்றால்: குர்-ஆனை எழுதியவர்கள் வேதாகமத்தில் இருந்து அநேக வசனங்களை எடுத்து குர்-ஆனை எழுதுகின்ற சமயம் விசயம் தெரியாமல் இயேசுவினுடைய தாய் மேரியும், ஆரோனுடைய சகோதரி மிரியாமும் -இருவரும் ஒருவர் ஒன்று என நினைத்து மாற்றி எழுதிவிட்டார்கள்.

என்ன கண்டுபிடிப்பு பார்த்தீர்களா? எவ்வளவு ஆய்வுப்பூர்வமான விளக்கம் பார்த்தீர்களா? இந்த அபாரமான கண்டுபிடிப்பை (?) படித்த Colvin என்ற கிறிஸ்தவர் உணர்ச்சி வசப்பட்டு


நல்ல நகைச்சுவை தொடர்ந்து எழுது. கடைசியில் குர்ஆனின் சரித்திரத தவறுகளையெல்லாம் நீயே உன் கையால் புடமிடப் போகிறாய்

உனக்கு ஒரு இ-மெயில் அனுப்பியுள்ளேன்.
நீ ஒரு ஆம்பளயா இருந்தா அதற்கு முதலில் பதில் அளி பார்ப்போம்.
எவ்வளவு வெறித்தனம்? எத்தனை நாள் கோபமோ! இது தான் இவர்கள் சமாதானத்தை போதித்த இயேசுவிடம் கற்றுக்கொண்ட நற்குணங்கள் போலும்? அது இருக்கட்டும். அவர் கோரியபடி பதிலுக்கு வருவோம்.

இந்த தவறை (?) கண்டுபிடித்த கிறிஸ்தவர் தனது கட்டுரையின் தொடக்கத்திலேயே மேரியை (இயேசுவின் தாய்) ஆரோனுடைய, மோசேயுடைய சகோதரியாக சொல்லப்பட்டிருக்கின்றது. (மேரி- எபிரேய மொழியில் மிரியாம் – குர்-ஆனில் மர்யம்)

இயேசுவினுடைய காலத்திற்கும், மோசேயினுடைய காலத்திற்கும் இடையில் உள்ள இடைவெளி 1400 வருடங்களுக்கு மேல். குர்-ஆனை எழுதிய அல்லாவிற்கு இது எப்படி தெரியாமல் இருந்தது ? என்று எழுதுகின்றார்.

இவர் குற்றம் சுமத்துவது போல் எந்த இடத்தில் மரியாளை இறைதூதர்களான ஹாரூன் (ஆரோன்) மற்றும் மூசா (மோசே)வின் சொந்த சகோதரி என்று சொல்லப்பட்டுள்ளது? ஒரு இடத்திலும் சொல்லப்படவில்லை. மாறாக, திருக்குர்ஆனின் 19:28ம் வசனத்தில், ஹாரூன் என்ற பெயரை கொண்ட ஒருவரின் சகோதரியாகவே திருக்குர்ஆன் மரியாளை அடையாளம் காட்டுகின்றது. இதில் என்ன தவறு கண்டுபிடித்துவிட்டனர் என்று நமக்குப் புரியவில்லை.

ஏனெனில், பொதுவாக ஒரு பெயர் உலகில் ஒருவருக்கு மட்டும் தான் இருக்குமா? அல்லது பலருக்கும் இருக்குமா? என்பதை சிந்திக்க மறந்துவிட்டார் இந்த ஆய்வை (?) சமர்ப்பித்த கிறிஸ்தவ நன்பர். இவர் குறிப்பிடுவது போன்று ‘மேரியை ஆரோனுடைய, மோசேயுடைய சகோதரியாக சொல்லப்படுகின்றது’ என்று கண்மூடித்தனமாக குர்ஆனின் மீது குற்றம் சாட்டுவதற்கும் முன், ஒரு பெயர் பலருக்கும் இருக்க வாய்பிருக்கின்றதா? இல்லையா? என்பதை ஏன் யோசிக்கவில்லை? குறிப்பாக முன் சென்ற தீர்க்கதரிகளுடைய அல்லது கர்த்தரால் சிலாகித்துச் சொல்லப்படக்கூடிய பரிசுத்தவான்களின் – நல்லவர்களின் பெயர்களை அவர்களுக்குப் பின் வருபவர்கள் வைப்பார்களா? மாட்டார்களா? வைத்திருக்க வாய்ப்பு இருக்கின்றதா? இல்லையா? குர்ஆனின் மீது குற்றம் சாட்டுவதற்கும் முன் இந்த சாதாரன நடைமுறையை கூட ஏன் இந்த கிறிஸ்தவ நன்பர் சிந்திக்கவில்லை?

உதாரனமாக சொல்லவேண்டும் என்றால், புதிய ஏற்பாட்டின் முதல் புத்தகமான மத்தேயுவில் இயேசுவினுடைய வம்சவரலாறைப் பற்றி சொல்லப்படுகின்றது. அந்த மத்தேயுவின் 1:16ம் வசனத்தில் ‘யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான்’ என்று வருகின்றது. இதைப் படிக்கும் இந்த கிறிஸ்தவர், ‘மத்தேயு தவறாக எழுதிவிட்டார், யாக்கோபு என்பவர் ஈசாக்கின் மகன். இவர் பிறந்ததோ கிமு 1841. அந்த யாக்கோபின் குமாரன் தான் யோசேப்பு. இவர் பிறந்ததோ கிமு 1750. (பார்க்க ஆதியாகமம் 35:23-24) அந்த யோசேப்புக்கும் அவருக்குப் பின் 1750 ஆண்டுகள் கழித்து வாழ்ந்த மரியாளுக்கும் எப்படி திருமணம் நடந்திருக்கும்? இங்கே மத்தேயு தவறாக – கவனக்குறைவாக பழைய ஏற்பாட்டைப் பார்த்து காப்பி அடித்து எழுதும் போது தவறிழைத்துவிட்டார் என்று குற்றம் சாட்டுவாரா? அல்லது முந்தைய தீர்க்கதரிசிகளின் – நல்லவர்களின் பெயர்களை அவர்களுக்குப் பின் வருபவர்களுக்கு வைக்கும் வழக்கமிருக்கின்றது. அந்த அடிப்படையிலேயே மரியாளுடைய புருஷனாகிய யோசேப்புக்கும், அவரது தந்தையான யாக்கோபுக்கும் வைக்கப்பட்டிருக்கும் என்று முடிவு செய்வாரா?
குர்ஆனில் மரியாளைப் பார்த்து ‘ஹாரூனின் சகோதரியே’ என்று அழைத்ததை நபி (ஸல்) அவர்கள் குர்ஆனில் சரித்திரம் தெரியாமல் தவறாக எழுதிவிட்டார் என்று குற்றம்சுமத்தும் இந்த கிறிஸ்தவர், அதே கண்னோட்டத்தோடு மத்தேயுவும் பழைய ஏற்பாட்டை காப்பி அடிக்கும் போது கவனக்குறைவாக தவறிழைத்துவிட்டார் என்று சொல்ல முன்வருவாரா? இதை முதலில் அந்த கிறிஸ்தவ நன்பரின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.

அடுத்து, திருக்குர்ஆனின் 19:28ம் வசனத்தில் மரியாளைப் பார்த்து ‘ஹாரூனின் சகோதரியே’ என்று அழைப்பது அவருக்கு ஹாரூன் என்ற சகோதரர் இருந்த காரணத்தினாலேயே தவிர, நபி (ஸல்) அவர்களின் கவனக்குறைவினால் நடந்த தவறு அல்ல என்பதை கிறிஸ்தவ நன்பர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். அப்படியே இந்த ஹாரூன் என்றப் பெயர் இறைத்தூதர் ஹாரூனையே – (ஆரோனையே) குறிக்கும் என்றிருந்தால், ‘ஹாரூனுடைய சகோதரி’ என்று குறிப்பிடப்படும் இடத்தில் அவரைவீட மிகவும் பிரபலமானவரான முசா (மோசே) அவர்களைக் குறிப்பிட்டு ‘மூசாவின் சகோதரியே!’ என்று குறிப்பிட்டிருக்கலாமே? ஏனெனில் இறைதூதர்களான ஹாரூனும் முசாவும் சகோதரர்கள். ஹாரூனுக்கு சகோதரியாக இருப்பவர் மூசாவுக்கும் சகோதரியாகவே இருப்பார். அப்படி இருக்கும் நிலையில், இங்கே இறைதூதர் ஹாரூன்தான் நோக்கமாக இருந்திருந்தால், அவருக்கு பதில் பிரபலமான மோசேயை குறிப்பிட்டு கூறியிருக்கலாமே? எனவே இங்கே குறிப்பிடப்படும் ஹாரூன் என்பவர் மரியாளுடைய சொந்த சகோதரரையே குறிக்குமேயன்றி இறைதூதர் ஹாருனை அல்ல என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.
இதே கேள்வியை இப்பொழுது மட்டுமல்ல, 1400 ஆண்டுகளுக்கு முன்பு நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களிடமும் கேட்கப்பட்டு அதற்கு அன்றைக்கே பெருமானார் அவர்கள் பதிலும் அளித்துவிட்டார்கள் என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

நபித்தோழர் முஃகீரா பின் ஷூஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை (யமன் நாட்டிலுள்ள)நஜ்ரான் நகரத்திற்கு அனுப்பியிருந்தார்கள். அங்கிருந்தவர்கள் இவ்வசனத்தைச் சுட்டிக்காட்டி ‘ஹாரூனுக்கும் மர்யமுக்கும் இடையே இன்னின்ன கால இடைவெளி இருக்கும்நிலையில் எவ்வாறு மர்யமை ஹாரூனுடைய சகோதரி என்று உங்கள் வேதம் கூறுகின்றது?’ என்று கேட்டார்கள். நான் மதீனா திரும்பியபின் இது தொடர்பாக நபி (ஸல்) அவர்களிடம் வினவினேன். அப்போது நபியவர்கள் ‘பனூஇஸ்ராயீல் மக்கள் தங்களுக்கு முன் வாழ்ந்த நபிமார்கள் (தீர்க்கதரிசிகள்), நல்லவர்கள் ஆகியோரின் பெயர்களை தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டிவந்தனர்’ என்று விளக்கமளித்தார்கள்.- நூல்: (ஸஹீஹ் முஸ்லீம், திர்மிதி, நஸயீ, முஸ்னது அஹ்மத்)

இந்த நபிமொழியின் படி பெருமானாரிடமே இன்றைய கிறிஸ்தவர்களால் கேட்கப்படும் அதி மேதாவித்தனமான கேள்வி அன்றைக்கே கேட்கப்பட்டது. அதற்கு பெருமானார் (ஸல்) அவர்கள், அக்காலத்தில் உள்ளவர்கள் தங்களுக்கு முன்சென்ற தீர்க்கதரிசிகளின் -நல்லவர்களின் பெயர்களை சூட்டிக்கொள்ளும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள் என்று விளக்கமளிக்கின்றார்கள். எனவே, மரியாளுக்கு ஹாரூன் என்ற சகோதரர் இருந்தார். அந்த அடிப்படையில் அன்றைய சமூகத்தினர், மரியாளை அவ்வாறு குறிப்பிடுகின்றனர். அதைத் தான் குர்ஆனும் குறிப்பிடுகின்றது. எனவே இதில் ஒன்றும் தவறு நடந்துவிடவில்லை என்பதை இரண்டாவதாக சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

அடுத்து இன்னொன்றையும் இங்கே முக்கியமாக விளக்கியாக வேண்டும். அதாவது, இந்தக் கேள்வி ஏன் இந்த கிறிஸ்தவர்களுக்கு எழுகின்றதென்றால், இவர்கள் இறைவேதமாக நமபும் பைபிளில் மரியாளுக்கு சகோதரர்கள் இருந்ததாக எந்த ஒரு குறிப்பும் கிடையாது. அதை வைத்து, குர்ஆனில் சரித்திரத் தவறு என்ற இந்த குற்றச்சாட்டை கிறிஸ்தவ நண்பர் முன்வைக்கின்றார். இதுவும் ஒரு தவறான கண்னோட்டமே!

ஏனெனில், பைபிளில் மரியாளைப் பற்றி முழுமையான எந்த ஒரு தகவலும் கிடையாது என்பதை முதலில் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். யார் யாருடைய தகவல்களெல்லாம் பைபிளில் எழுதப்பட்டிருக்கின்றது. சம்பந்தமே இல்லாத பலரின் வம்சவரலாறுகளெல்லம் எழுதப்பட்டு பைபிளின் பக்கங்கள் வீனடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தந்தையே இல்லாமல் பிறந்த இயேசுவுக்கு தந்தை வழி வம்சவரலாற்றை கூறப்படுகின்றது. (அதிலும் பல குளறுபடிகள்)இயேசுவை அதிசயமாக பெற்றெடுத்த பரிசுத்த பெண்மணியான மரியாளைப் பற்றிய தகவல்கள் மட்டும் வேண்டும் என்றே பைபிளில் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளது. அவரது தந்தை யார்? அவரது தாயார் யார்? அவருக்கு சகோதரர் யாரும் இருக்கின்றார்களா? இப்படி எந்த ஒரு நேரடியான தகவளும் பைபிளில் கிடையாது. மாறாக இயேசு அவரை உதாசீனப்படுத்தியதாகவும் – அவமரியாதை செய்ததாகவுமே பைபிளில் எழுதிவைத்துள்ளனார். இப்படி மரியாளைப் பற்றிய எந்த ஒரு தெளிவான தகவலும் பைபிளில் இல்லாத போது அதை ஆதாரமாக வைத்து குர்ஆனை எப்படி விமர்சிக்கலாம்? சற்று சிந்திக்க வேண்டாமா? ஆனால்

மரியாளின் சகோதரர் யார் என்பது பற்றி நேரடியாக பைபிளில் சொல்லப்படவில்லை என்பதற்காக ‘ஹாருனின் சகோதரரியே’ என்று குர்ஆன் குறிப்பிடுவதை வைத்து திருக்குர்ஆனின் மீது கலங்கம் கற்பிக்க முயற்சிக்கும் கிறிஸ்தவர்கள், அவரின் தந்தையைப் பற்றியோ தாயாரைப் பற்றியோ அதே பைபிளில் எந்த ஒரு குறிப்பும் இல்லையே! அதற்காக அவருக்கு தாயோ தந்தையோ இல்லாமல் அதிசயமாக வானத்திலிருந்து குதித்தார் என்று வாதிடுவார்களா? அவரது இறப்பு பற்றியோ அல்லது பிறப்பு பற்றியோ பைபிளில் எந்த ஒரு குறிப்பும் இல்லையே அதற்காக அவரை ‘பிறப்பும் இறப்பும் இல்லாத ஒரு அதிசயப் பிறவி’ என்று வாதிடுவார்களா?

அது மட்டுமல்ல, பல முரண்பாடுகளும் குழப்பங்களும் பொய்களும் நிரம்பிய பைபிளை வைத்து ஒருவருடைய வரலாற்றை ஆய்வு செய்யலாமா? அதற்கு அப்படி ஏதாவது தகுதி இருக்கின்றதா? அதுவும் ‘முரண்பாடுகளே இல்லாத ஒரே இறைவேதம்’ என்று சவால் விடுகின்ற குர்ஆன் என்னும் ஒரு இறைவேதத்தை எடைபோடுவதற்கு பைபிளை ஆதாரமாக எடுக்கலாமா? பைபிளில் ஒன்று இரண்டு முரண்பாடா? இருக்கின்றது? நூற்றுக்கணக்கான முரண்பாடுகளும் ஆயிரக்கணக்கான தவறுகளும் நிறம்பிய ஒரு புத்தகம் எப்படி வரலாற்று ஆதாரமாக இருக்க முடியும்? குர்ஆன் போன்ற ஒரு புத்தகத்தின் நம்பகத்தன்மையை உரசிப்பார்க்கும் ஆதாரமாக எப்படி இந்த பைபிள் இருக்க முடியும்? அப்படி பைபிளோடு உரசி குர்ஆனின் நம்பகத்தன்மையை எடைபோடுபவர்கள் முதலில் நாம் பைபிளின் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கட்டும். அதன் பிறகு திருக்குர்ஆனை விமர்சிக்கட்டும்.

அடுத்து தனது கட்டுரையில், குர்ஆன் பைபிளிலிருந்து காப்பி அடிக்கப்பட்டது என்ற மற்றொரு குற்றச்சாட்டையும் முன்வைக்கின்றார். இது குறித்து விரிவாக விளக்க வேண்டி இருக்கின்றது. இருந்தாலும் சுறுக்கமாக இங்கே பார்த்து விடுவோம்.

குர்ஆன் பைபிளிலிருந்து காப்பி அடிக்கப்பட்டதா?

அந்த கிறிஸ்தவ நன்பர் பின்வரும் ஒரு குற்றச்சாட்டையும் தனது கட்டுரையில் முன்வைக்கின்றார்:

என்ன நடந்திருக்கின்றது என்றால்: குர்-ஆனை எழுதியவர்கள் வேதாகமத்தில் இருந்து அநேக வசனங்களை எடுத்து குர்-ஆனை எழுதுகின்ற சமயம் விசயம் தெரியாமல் இயேசுவினுடைய தாய் மேரியும், ஆரோனுடைய சகோதரி மிரியாமும் -இருவரும் ஒருவர் ஒன்று என நினைத்து மாற்றி எழுதிவிட்டார்கள்.

முதலில் பைபிளைப் பார்த்து குர்ஆன் காப்பி அடிக்கப்பட்டது என்று குற்றம் சுமத்துபவர்கள், பைபிள் எப்பொழுது அரபியில் மொழிப்பெயர்க்கப்பட்டது என்ற வரலாறை ஆய்வு செய்ய மறந்துவிடுகின்றனர். இவர்கள் உபயோகப்படுத்தும் இன்றைய அங்கீகரிக்கப்பட்ட பைபிள், நபி (ஸல்) அவர்களின் காலத்திற்கும் 200 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அரபியில் மொழிப்பெயர்க்கப்பட்டிருக்கும் பொழுது, அதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த முஹம்மது நபிக்கு எப்படி அந்த பைபிள் பிரதி கிடைத்திருக்கும்? சற்று சிந்தித்துப்பார்க்க வேண்டாமா?

இன்று நடைமுறையில் உள்ள இவர்கள் ஏற்றுக்கொண்டுள்ள பைபிளை 500 முதல் 1000 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் பெரும் பெரும் கிறிஸ்தவ பாதிரிமார்களைத் தவிர வேறு யாரும் படிக்க முடியாது. அந்த அளவுக்கு மிகக் கடுமையாக பைபிளை விட்டும் பொதுமக்களைத் தடுத்து வைத்திருந்தார்கள் என்று கிறிஸ்தவ வரலாறுகள் கூறுகின்றது. அந்த பைபிள்களோ மதகுருமார்கள் மட்டுமே படிக்கும் வகையில் கிரேக்க, எபிரேயு மற்றும் லத்தீன் மொழிகளில் மட்டும் தான் இருக்கும். பாமரர்கள் யாரும் படித்துவிட முடியாத படி சங்கிலியால் கட்டி வைத்து பாதுகாத்தனர் என்றும், அப்படி மீறி படிக்க நினைக்கும் மதகுருமார்கள் அல்லாத பலர் சிலுவையில் அறையப்பட்டும் இன்னும் பல கொடுமைகளுக்கு இன்னல்களுக்கும் ஆளாக்கபட்டு துன்புறுத்தப்பட்டனர் என்றும் கிறிஸ்தவ வரலாறுகள் கூறுகின்றது. இன்னும் சொல்லப்போனால் குர்ஆனின் மீது பொருத்தமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் இந்த கிறிஸ்தவர்கள் பின்பற்றக்கூடிய கிறிஸ்தவ மதத்தின் ஒரு பிரிவான ‘புரோட்டஸ்டன்ட்’ பிரிவே இது போன்ற கொடுமைகளுக்கு எதிராக இன்றிலிருந்து 500 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டதே.

இவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட பைபிளை படிப்பதற்கு அதைப் பின்பற்றும் கிறிஸ்தவர்களுக்கே இந்த நிலைமை என்றிருக்கும் பொழுது, 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த எழுதப்படிக்கத்தெரியாதவர் என்று வரலாற்றில் குறிப்பிடப்படுகின்ற நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் எப்படி அந்த பைபிள் கிடைத்திருக்கும். அதுவும் வேற்று மெழியான அரபியில்? சிந்திக்க வேண்டாமா?


எனவே கிறிஸ்தவர்களே! இஸ்லாத்தின் மீது இது போன்ற எந்த ஒரு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவதை விட்டுவிட்டு, திருக்குர்ஆனை சத்தியத்தை அறியும் நோக்கத்துடன் படியுங்கள். அதன் மூலம் சத்தியத்தை அறியுங்கள் – சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.

நன்றி: egathuvam.blogspot.com

முதுமையில் வாடும் ஒரு இளைஞன்


FM அஸ்லம்
(ரஜரட்டை மருத்துவபீடம்)
aslamaumsa@gmail.com

‘உங்களிடம் உள்ள ஒவ்வொரு அருட்கொடையும் அழ்ழாஹ்வுடையது.’ (அல்குர்ஆன் 16:53)

கடந்த மாதம் அநுராதபுர போதனா வைத்தியசாலையின் 118ம் இலக்க பொது நோயியல் மருத்துவ விடுதியில் 24 வயது நிரம்பிய ஊர்காவற்படை வீரர் ஒருவர் தனது உடல் முழுவதும் தூக்க மயக்கமாகவும், களைப்பாகவும் இருப்பதுடன் உடல் முழுவதும் நோயிருப்பதாகவும் கூறி அனுமதிக்கப் பட்டிருந்தார்.

இவரை மேலதிக பரிசோதனைக் குட்படுத்திய போது கண், முண்டம் போன்றவை வீங்கியிருப்பதுடன் கண்புருவ மயிர்கள் உதிர்ந்தும் கையில் உள்ள தசைகள் விறைத்துப் போய் பலவீனமுற்று குரல் சத்தமும் தடிப்படைந்து உடல் தளர்ச்சியாகவும் காணப்பட்டது.

மேலும் இந்த இளைஞனின் தெறிவினைகள் தாமதாமாகி நிகழ்வதுடன் (Slow replacing reflex) இதயத்துடிப்பும் குறைவடைந்திருந்தது. இவ்வாறான அறிகுறிகள் கழுத்தில் குரல்வளைக்கு முன்புறமாக அமைந்துள்ள இரு சிறகுகளையும் விரித்து உட்கார்ந்து கொண்டிருக்கும் ஒரு வண்ணாத்துப் பூச்சியின் அமைப்பை ஒத்த தைரொயிட் சுரப்பியினால் சுரக்கப்படும் தைரொக்ஸின் ஓமோனின் அளவு குறையும் போது தோன்றுவதால் இந்த ஓமோன் குருதியில் குறைவடைந்திருக்கலாம். ஏன சந்தேகிக்கப்பட்டு நிரூபிப்பதற்காக இந்த இளைஞனின் குருதி எடுக்கப்பட்டு அதில் உள்ள தைரொக்ஸின் ஓமோனின் அளவு கணிக்கப்பட்டது. இது சாதாரண சுகதேகியின் குருதியில் உள்ள அளவிலும் பார்க்க குறைவாகக் காணப்பட்டது.

உடலில் தைரொக்ஸின் ஓமோன் சுரத்தலானது மூன்று சுரப்பிகள் மூலம் ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு தொடரான பொறிமுறையினூடாக நிகழ்கின்றது. அதாவது மூளையத்தில் அமைந்துள்ள பரிவகக்கீழ் எனும் சுரப்பியினால் முதலில் தைரொக்ஸின் விடுவிக்கும் ஓமோன் சுரக்கப்பட்டு இந்த ஓமோனானது குருதி மூலம் விடுவிக்கப்பட்ட தைரொயிட் சுரப்பியைத்தூண்டி தைரொக்ஸின் ஓமோனைச் சுரக்கச் செய்கின்றது. ஆகவே, இம்மூன்று சுரப்பிகளில் ஏதாவது ஒன்றில் ஏற்படும் பாதிப்புக்கள் தைரொக்ஸின் சுரத்தலைப் பாதிக்கின்றது.

மேலும் இந்த இளைஞனுக்கு எந்தச் சுரப்பியில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை அறிவதற்காக இவருடைய தலையை CT Scan எடுத்து அவதானித்தபோது கபச்சுரப்பியில் ஒரு சிறிய கட்டியொன்று தோன்றி வளர்ந்து வருவது அவதானிக்கப்பட்டது. அதாவது கபச்சுரப்பியில் தோன்றியிருக்கும் இந்தக்கட்டி TSHச் சுரக்கும் கலங்களை நசுக்கி TSH சுரத்தலைக் குறைத்திருப்பதால் தைரொயிட் சுரப்பியைத் தூண்டுதல் குறைந்து தைரொக்ஸின் சுரத்தலைக் குறைத் திருக்கின்றது.

மேலும் இந்தக்கட்டி வளர்ந்து கொண்டு செல்லும் போது கபச்சுரப்பியால் சுரக்கப்படும் மற்றைய மிக முக்கியமான 5 ஓமோன்களின் சுரத்தலும் பாதிக்கப்படுவதால் வளர்ச்சி குன்றுதல், பெண்களின் பால் குறைவடைதல், மலட்டுத் தன்மை உருவாதல், உடல் நிறை குறைவடைதல், குருதிக் குளுக்கோஸில் அயன்களின் நிலை பாதிப்படைதல், போன்ற மற்றும் பல பிரச்சனைகளையும் தோற்றுவிக்கும். இக்கபச் சுரப்பியானது இரண்டு பக்கங்களிலிருந்து வரும் பார்வை நரம்புகள் குறுக்கிடும் இடத்துக்கு சராசரியாக சற்று மேலாக காணப்படுவதால் அதுவும் நசுக்கப்பட்டு இருபக்கமும் பக்க கண்களால் உள்ள பொருட்களை பார்க்க முடியாமல் ஆகிவிடும்.

தைரொக்ஸின் ஓமோனானது மூளை வளர்ச்சிக்கு அவசியமாகையால் இதன் குறைபாடு மந்த புத்தி, மதிமயக்கம் போன்றவற்றையும் ஏற்படுத்தி யிருக்கின்றது. மேலும் தைரொக்ஸின் ஓமோனானது உடலின் வெப்ப வீதத்தைக் கூட்டி உருவாக்குவதன் மூலம் குளிர் காலங்களிலும் உடல் வெப்ப நிலை மாறுபடாமல் பேணி உடலிலுள்ள புரதங்கள், கலங்கள் அழிவடைவதைத் தடுக்கின்றது. இதனால் தைரொக்ஸின் குறைபாடுள்ளவர்கள் குளிர் காலங்களில் அல்லது குளிர்பிரதேசங்களில் வாழ முடியாமல் அவதியுறுகின்றார்கள்.

கபச்சுரப்பியால் பாதிப்பேற்படாமல் வேறு வழிகளில் தைரொக்ஸின் ஓமோன் குறைவடையும் போது இந்தக் குறைவானது எதிர் பின்னூட்டல் பொறிமுறை மூலம் கபச்சுரப்பியைத் தூண்டி அதிகளவு TSHஐச் சுரக்கச்செய்கின்றது. இந்த அதிகரித்த TSH ஆனது தைரொயிட் சுரப்பியைத் தூண்டி அதிகளவு வளர்ச்சி யடையச் செய்வதால் இச்சுரப்பியானது பருமனில் பெரிதாகி கழுத்தில் ஒரு பெரிய கட்டி இருப்பது போன்று தோற்றமளிக்கும். இது கண்டமாலை என அழைக்கப் படுகின்றது.


இச்சுரப்பியானது இவர்களின் சமூக வாழ்கையை பெரிதும் பாதிக்கின்றது. இதற்கு நிவாரணமாக இச்சுப்பியை வெட்டி அகற்றிவிட்டு பின்னர் மிருகங்களில் பெறப்பட்டு சந்தையில் விற்பனையாகின்ற தைரொக்ஸின் மாத்திரைகளை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் வாழ்நாள் பூராக உட்கொள்ள வேண்டியிருக்கும். இம்மாத்திரைகள் வயோதிபர்கள் மற்றும் இதய நோய் உள்ளவர்களில் மிக மோசமான பக்க விளைவு களையும் ஏற்படுத்துகின்றது. இச்சுரப்பியை வெட்டி அகற்றும் இச்சத்திர சிகிச்சையானது மிகவும் அபாயகரமானது. ஏனெனில், இச்சத்திர சிகிச்சையின் போது அதிகளவு இரத்தப்போக்கு ஏற்படுவதால் இச்சுரப்பியை மருவிக் கொண்டு குரல் வளைக்குச் செல்லும் நரம்புகள் தவறுதலாக வெட்டப்பட்டுவிடலாம். இதனால் நன்கு பேசிக்கொண்டிருந்த நோயாளி சத்திரசிகிச்சையின் பின்னர் கதைக்க முடியாமல் கூட ஆகிவிடும்.

மற்றும், இதன்போது தைரொக்ஸின் சுரப்பியின் நான்கு மூலைகளிலும் நான்கு பட்டன்கள் போல் அமைந்துள்ள புடைக்கேடையப் போலிச்சுரப்பியும் வெட்டி அகற்றப்பட்டுவிடக்கூடும். இவ்வாறு அகற்றப்படுமெனில் இச்சுரப்பியால் சுரக்கப்படும் ஓமோன் உடலில் அற்றுப்போவதால் கல்சியம் குறைவடைந்து வலிப்பு, கைவீக்கம் மற்றும் தசைச்சுருக்கம் என்பன ஏற்படுகின்றது. இவ்வாறான சந்தர்பங்களில் தைரொக்ஸினுடன் சேர்த்து கல்சியமும் வாழ்நாள் முழுவதும் கொடுக்கப்படவேண்டும்.

பகல் காலங்களில் வயலில் வேலை செய்தும், இரவில் ஊர்காவற்படை வீரராகவும் பணி புரிந்து உழைத்து, தனது வயதான அம்மாவையும் பரிபாலித்து வாழ்ந்து வந்த இந்த இளைஞனுக்கு திடீரென எந்த வேலையும் செய்ய முடியாமலும், துப்பாக்கியைக்கூட தூக்கி நடக்க முடியாமலும், வேறு எந்த தொழிலும் செய்ய முடியாமலும் அல்லலுறும் காட்சி அதிர்ச்சியானது. அதாவது எந்த அளவுக்கு எனில் தனது தாய்க்கு உதவிசெய்ய வேண்டிய இந்த இளைஞனுக்கு அவனுடைய வயதான தாய் அவனுக்கு உதவி செய்யும் நிலையை சற்று சிந்தித்துப் பார்ப்போமெனில் பிறவியில் எந்த ஊனமும் இன்றிப் பிறந்த இந்த இளைஞன் இளமைப் பருவத்தை யடைந்து இளமையின் சுகபோகங்கள் அனைத்தையும் நுகர்ந்து கொண்டிருந்த இந்த இளைஞனுக்கு திடீரென ஏற்பட்ட இந்த வயோதிப பன்புகள் அழ்ழாஹ் உடலின் ஆட்சியாளன் என்பதையும் எந்த நேரத்திலும் எதையுமே செய்துமுடிக்கப் போதுமானவன் என்பதையும் உணர்த்துகின்றதல்லவா?

‘மனிதனுக்கு நாம் அருளை அனுபவிக்கச்செய்து பின்னர் அவர்களிடமிருந்து அதை எடுத்துவிட்டால் அவன் நம்பிக்கை இழந்தவனாகவும், நம்மை மறுப்போனாகவும் மாறிவிடுகின்றான். அவனுக்கு ஏற்பட்ட துன்பத்திற்கு பின் இன்பத்தை நாம் அனுபவிக்கச் செய்தால் என்னை விட்டும் தீங்குகள் அகன்றுவிட்டன. என்று கூறுகின்றான். அவன் பெருமிதமும் கர்வமும் கொள்கின்றான்.’ (அல்குர்ஆன் 11:09)

பணம் மற்றும் பதவி படைத்தவர்கள் நான் கஷ்டப்பட்டு உழைத்ததாலும், கண்விழித்துப் படித்ததாலும் மற்றும் எனது திறமையினாலும்தான் இன்று நான் இந்த நிலைமையில் இருக்கின்றேன் என்று அழ்ழாஹ்வை மறந்து மார்தட்டிக் கொள்கின்றார்களே. இவர்கள் சிந்திக்கவேண்டாமா? இவர்களின் தைரொக்ஸின் ஓமோன்களைக் குறைத்து மந்தபுத்தி யுடையவர்களாகவும், சோம்பேறிகளாகவும், கழுத்தில் பெரிய கட்டியுடனும் வீட்டில் முடக்கி வைக்கப் போதுமான அழ்ழாஹ்வையும் மற்றும் அவனது ஆற்றல்களையும் சிந்திக்கவேண்டும்.

‘தமது இறைவனின் திருமுகத்தை நாடி காலையிலும், மாலையிலும் தமது இறைவனைப் பிரார்த்திக்கும் மக்களுடன் உம்மைக் கட்டுப் படுத்திக் கொள்வீராக! இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியை நாடி அவர்களை விட்டும் உமது கண்களைத் திருப்பிவிடாதீர்! நம்மை நினைப்பதை விட்டும் எவனது சிந்தனையை நாம் மறக்கடிக்கச் செய்துவிட்டோமோ, அவனுக்குக் கட்டுப்படாதீர்! அவன் தனது மனோ இச்சையைப் பின்பற்றுகிறான். அவனது காரியம் வரம்பு மீறுவதாக உள்ளது.’ (அல்குர்ஆன்-18:28)

அன்றாடம் தொழில் செய்து சுறுசுறுப்பாக அவர்களின் காரியங்களை முடித்துக் கொண்டு குடும்பங்களை நடாத்துகின்றவர்களும் இன்று தன்னை விட பணம், பதவியால் உயர்ந்தவனைப் பார்த்து இவரைப் போல் என்னையும் ஆக்கியிருக்கக்கூடாதா? என்று இறைவனைக் கடிந்து கொள்வதும் உண்டு. இவர்களுக்கு வழங்கியிருக்கும் ஆரோக்கியம் எனும் அருட்கொடையையும் தம்மைவிடத் தாழ்ந்த நிலையில் உள்ளவர்களையும் ஏன் எந்தத் தொழிலும் செய்ய முடியாமல் அவதிப்படும் இந்த இளைஞனின் நிலைமையைக் கூட இவர்கள் சிந்திக்கவேண்டாமா?

எம்மை சுகத்துடனும் ஆரோக்கியத்துடனும் வாழவைத்து உணவளித்துக் கொண்டிருக்கின்ற அழ்ழாஹ்வின் மாபெரும் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவதுடன் அவனது அருட்கொடைகளை அவன் விரும்புகின்ற விதத்தில் பயன்படுத்தி நற்பேறு பெறுவோமாக.


நன்றி : http://dharulathar.com

Monday, April 12, 2010

அல்குர்ஆன் இற‌க்கி அருளப்பட்டதா? படைக்கப்பட்டதா?

அழ் ஹாபிழ் அபூ அஸ்பாக் அல் அதரி
abuashfaqalathary@gmail.com

”மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்குச் சான்று வந்துள்ளது. உங்களிடம் தெளிவான ஒளியையும் அருளியுள்ளோம்.’ (அல் குர்ஆன் 4:174)

மனித குலத்தின் ஈருலக வெற்றிக்கு கருவாக இருக்கின்ற திருமறைக் குர்ஆன் ஜாஹிலிய்யா காலம் தொட்டு இன்றைய நவீனகாலம்வரை ஏற்படுத்திய மாற்றங்களையும், சாதித்த சாதனைகளையும் எழுத ஆரம்பித்தால் பேனாவின் மைக்குப்பிகள் முடிவுற்றுவிடும். மனித வரலாற்றில் சாதனை படைத்த சாதனையாளர்களின் பின்னணியில் தாக்கம் செலுத்துவது அல்குர்ஆனின் அறிவூட்டல்தான் என்பதை அறிந்துகொள்ள முடியும்.

இத்தகைய புனிதமிகு வேதம் எவ்வாறு இவ்வுலகிற்கு வருகை தந்தது என்பதில் மனித சமூகத்தில் இரு விதமான கோட்பாடுகள்காணப்படுகின்றன. இவற்றில் முஸ்லிம்களாகிய நாம் எதனை கடைப்பிடிக்க வேண்டும் என்பது தொடர்பாக இக்கட்டுரை அலசவிருக் கின்றது. இவற்றில் பூரண தெளிவில்லாமல் நாம் வணக்க வழிபாடுகளை மேற்கொள்வது உப்பில்லா பண்டம் குப்பையில் என்ற பழமொழிக்கு ஒத்ததாகத்தான் இருக்கும். அவைகளை பரத்தப்பட்ட புழுதிகளாகவே நாளை மறுமையில் நாம் காண்போம்.

எனவே அல்குர்ஆனை படிப்பதற்கு முன் அதன் வருகை பற்றிய பூரண தெளிவை ஏற்படுத்திக்கொள்வது பொருத்தமென கருதுகின்றேன்.

முஸ்லிம்களாகிய நாம், திருமறைக்குர்ஆன், அருள்புரியப்பட்ட மகத்துவமிக்க இரவை தன்னகத்தே கொண்டுள்ள ரமழான் மாத்தில் இறக்கியருளப்பட்டது எனும் நம்பிக்கைகோட்பாட்டில் வாழ்ந்து வருகின்றோம். அன்றைய ஜாஹிலிய சமூகத்திடம் மூட நம்பிக்கைகள், பெண் குழந்தைகளை குழி தோண்டிப் புதைப்பது இளம்பெண்களை ஆடு மாடுகளைப் போன்று நடத்துவது, மதுபாணங்களை அருந்துவது,தந்தை இறந்து விட்டால் தந்தையின் மனைவியோடு மகன்சேர்வது, நிர்வாணமாக நின்று கடவுள் ஆராதனைகளை மேற்கொள்வது, இன, மத வேறுபாடுகள் பார்ப்பது போன்ற இன்னும் பல தீய குணங்கள் மேலோங்கிக் காணப்பட்டது.

இத்தகைய இழி நிலைகளை அவதானித்துக் கொண்டிருந்த முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இவற்றில் தானும் பங்காளியாகிவிடக் கூடாது என்பதற்காக மக்காவிற்கு வெளியே உள்ள ‘ஹிறா’ எனும் குகைக்குச் சென்று இவற்றிற்கான மாற்று வழிகளை சிந்திக்கலானார்கள்.

பல நாட்களுக்கான உணவுகளை தயார்படுத்திக்கொண்டு அங்கேயே தங்கியிருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் வானத்தையும், பூமியையும் தொட்டுக்கொண்டிருக்கும் அளவுக்கு பிரமாண்டமான தோற்றத்தில் ஜிப்ரீல் எனும் மலக்கு திடீரென நபிகளாரை கட்டியணைத்து ‘ஓதுவீராக’ எனக் கூறிய போது தமக்கு ஓதத்தெரியாது என நபியவர்கள் சொல்ல மீண்டும் ‘ஓதுவீராக’ எனக்கூற அப்போதும் தெரியாது என பதிலளித்தார்கள். பிறகு நபியவர்களை மிகவும் இறுக்கமாக கட்டியணைத்துக் கொண்டு அல் குர்ஆனின் 96வது அத்தி யாயத்தில் இடம் பெறும் முதல் ஐந்து வசனங்களையும் ஓதிக் காண்பித்தார்கள்.

நபியவர்கள் அதிர்ச்சியுற்று அச்சம் கொண்டவர்களாக தனது மனைவி ஹதீஜாவிடம் வந்து விடயத்தைக் கூறினார்கள். ‘இறைவன் நிச்சயமாக உங்களை இழிவு படுத்தமாட்டான், நீங்கள் உறவுகளை சேர்ந்து வாழுகின்றீர்கள், ஏழைகளுக்கு வாரி வழங்கு கின்றீர்கள், மக்களுக்கு உதவுகின்றீர்கள். எனவே, அழ்ழாஹ் உங்களை கைவிடமாட்டான்’ என ஆறுதல் வார்த்தைகளை கூறினார்கள். பிறகு முந்தைய வேதங்களை திறம்பட கற்றறிந்த தனது உறவினர் வரகாவிடம் நபிகளாரை அழைத்துச் சென்று விடயத்தை முறையிட்டார்கள.

அவர் ‘நீர் இறைவனின் தூதராக நியமிக் கப்பட்டுள்ளீர், உம்மை உமது சமுதாயத்தினர் ஊரை விட்டு வெளியேற்றும் நிலையை நீர் அடைவீர். ஏனெனில் இதுதான் முன்சென்ற இறைத் தூதர்களின் நிலை என்றெல்லாம் ஆறுதல் படுத்தினார்கள்.’ (நூல்: புஹாரி-3)

இவ்வாறே நபிகளாருக்கு இறைச் செய்தி கொடுக்கப் பட்டது. இவ்வாறு ஆரம்பித்த வஹி 23 வருடங்களாக சிறிது சிறிதாக இறக்கி அருளப்பட்டது. இந்த வருகையைக் குறித்து அருள்மறை அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.

‘ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்ட தாகவும் (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் இறக்கியருளப்பட்டது.’ (அல்குர்ஆன் 1:185).

மற்றுமொரு வசனத்தில் ‘இதனை நாம் அருள் பாலிக்கப்பட்ட இரவில் இறக்கி வைத்துள்ளோம்.’ (அல்குர்ஆன் 44:2). பிறிதொரு வசனத்தில் ‘இதனை (குர்ஆனை) மகத்துவமிக்க இரவில் இறக்கி அருளி யுள்ளோம்.’ (அல்குர்ஆன் 97:1).

மேற் கூறப்பட்ட வசனங்களை பார்க்கும் போது அல்குர்ஆனின் வருகையில் ஏதோ முரண்பாடு இருப்பது போன்று தோன்றுகிறது. சிலர் அவ்வாறு சித்தரித்தும் உள்ளனர். எனினும் உண்மையில் இவற்றில் எவ்வித முரண்பாடும் கிடையாது.

அல்குர்ஆன் 44:2ல் கூறப்படுகின்ற அருள்பாலிக்கப்பட்ட இரவு என்பது லைலதுல் கத்ர் எனும் மகத்துவமிக்க இரவு என்பதை அல்குர்ஆன் 97:1ஆம் வசனம் தெளிவுபடுத்துகிறது. இந்த மகத்துவமிக்க இரவு ரமழான் மாதத்தில் உள்ளது என்பதை அல்குர்ஆன் 185:1ஆம் வசனம் உணர்த்தி நிற்கின்றது. எனவே இம்மூன்று வசனங்களையும் கூர்ந்து கவனிக்கும் போது ஒன்றுக்கொன்று விளக்கமாக அமைந்துள்ளதே தவிர முரண்பாடுகள் கிடையாது என்பதை எம்மால் விளங்கிக்கொள்ள முடிகின்றது.

அடுத்து மற்றுமொரு சந்தேகமும் எழ வாய்ப்பு உள்ளது. அதாவது ரமழான் மாதத்தில் ‘லைலதுல் கத்ர்’ எனும் இரவில் அருள்மறை இறக்கியருளப்பட்டதென்றால் ஏனைய காலங்களில் இறக்கியருளப்படவில்லையா? 23 வருடங்களாக சிறிது சிறிதாக இறக்கியருளப்பட்டது என்பதுதானே இஸ்லாமிய வரலாறு கூறும் உண்மை?

உண்மையில் இது ஒரு நியாயமான கேள்வியாகும். எனினும் அல்குர்ஆனின் வருகை குறித்து உள்ள அடிப்படையில் எமக்கு தெளிவு கிடைக்குமாயின் இச்சந்தேகம் எழ வாய்ப்பே இல்லை. திருமறைக் குர்ஆனுக்கு இரு விதமான வருகைகள் உள்ளன.

நன்றி : http://dharulathar.com

Tuesday, March 23, 2010

பகைமை பாராட்டுகிறதா இஸ்லாம் ?

பகைமை பாராட்டுகிறதா இஸ்லாம் ?


காஃபிர்களை வெட்டிக் கொல்லுங்கள் என்று திருக்குர்ஆன் கட்டளையிடுகிறதே, இஸ்லாத்தை ஏற்காதவர்களை காஃபிர்கள் என்று வசைபாடுகிறதே, முஸ்லிமல்லாத மக்களுடன் சகிப்புத் தன்மையுடன் நடக்கக் கூடாது என்றெல்லாம் இஸ்லாம் கட்டளையிடுகிறதே?

மேற்கூறியவை இஸ்லாத்தின் மீது பரவலாகக் கூறப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள். இந்தக் குற்றச்சாட்டுக்களை சில விஷமிகள் பொதுமேடையில் பேசியும், இன்னும் சிலர் தற்போது இணையத்தளங்களின் எழுதுவதன் மூலம் முஸ்லீம்களுக்கும் மாற்று மதத்தவர்களுக்கும் பகைமை ஏற்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டும் வருகின்றனர்.

இவை, உண்மை கலப்பில்லாத குற்றச்சாட்டுக்களாகும்.

முஸ்லிமல்லாதவர்களைக் காஃபிர்கள் என்று இஸ்லாம் கூறுகிறது உண்மை தான். காஃபிர்கள் என்பது ஏசுவதற்குரிய வார்த்தையன்று. அரபு மொழியில் காஃபிர்கள் என்பதற்கு மறுப்பவர்கள், நிராகரிப்பவர்கள் என்று பொருள். இஸ்லாத்தை மறுப்பவர்கள், இஸ்லாத்தை நிராகரிப்பவர்கள் என்ற பொருளில் இவ்வார்த்தை பயன் படுத்தப்படுகிறது.

இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களை இஸ்லாத்தை ஏற்காதவர்கள் எனக் கூறுவதில் இழிவுபடுத்துதல் ஏதுமில்லை. காஃபிர்கள் என்பதன் பொருள் தெரியாத காரணத்தினால் அது ஏதோ திட்டக்கூடிய வார்த்தை என எண்ணிக் கொள்கின்றனர்.

‘காஃபிர்களைக் கொல்லுங்கள்! காஃபிர்களைக் கண்ட இடத்தில் வெட்டுங்கள்’ என்றெல்லாம் குர்ஆனிலேயே கூறப்பட்டுள்ளதே? என்ற குற்றச்சாட்டும் தவறாகப் புரிந்து கொண்டதனால் ஏற்பட்டதாகும். முதலில் அவர்கள் சுட்டிக் காட்டும் திருக்குர்ஆன் வசனங்களைப் பார்ப்போம்.

அவர்களைக் கண்ட இடத்தில் நீங்கள் வெட்டுங்கள்! உங்களை அவர்கள் வெளியேற்றியது போல் அவர்களை நீங்கள் வெளியேற்றுங்கள்! குழப்பம் கொலையை விடக் கொடியதாகும். மஸ்ஜிதுல் ஹராம்(கஃபா வளாகம்)அருகில் அவர்கள் உங்களுடன் போர் செய்யாத வரை அவர்களுடன் நீங்கள் போர் செய்யாதீர்கள்! அவர்கள்(அங்கே) உங்களுடன் போர் செய்தால் நீங்களும் அவர்களுடன் போர் செய்யுங்கள்! (அல்குர்ஆன் 2:191)

இது தான் அவர்கள் சுட்டிக் காட்டும் குர்ஆன் வசனம்.

இவ்வசனத்தில் ‘அவர்கள்’ என்று கூறப்பட்டுள்ளது. எந்த மொழியில் அவர்கள் என்று கூறப்பட்டாலும் அது யாரைக் குறிக்கிறது என்பதை முந்தைய வசனங்களில் தேடிப் பார்க்க வேண்டும். பொதுவாக முஸ்லிமல்லாத மக்களை அது குறிக்கின்றதா? குறிப்பிட்ட இனத்தவர்களைக் குறிப்பிடுகின்றதா? குறிப்பிட்ட செயல்களில் ஈடுபடும் மக்களைக் குறிப்பிடுகின்றதா? இதற்கான விடையை இதற்கு முந்தைய வசனங்களில் தேட வேண்டும்.

இதற்கு முந்தைய வசனத்தில் கூறப்பட்டதை அப்படியே எடுத்துக் காட்டுகிறோம். இந்தக் குற்றச்சாட்டு விஷமத்தனமானது என்பதை அதிலிருந்து யாரும் புரிந்து கொள்ள முடியும்.

உங்களுடன் போருக்கு வருபர்களுடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போரிடுங்கள்! வரம்பு மீறி விடாதீர்கள்! நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறியவர்களை நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 2:190)

உங்களுடன் யாரேனும் வலிய வம்புச் சண்டைக்கு வந்தால் அவர்களுடன் போரிடுங்கள் என்று இவ்வசனத்தில் கூறிவிட்டு அவர்களைக் கொல்லுங்கள் என்று அடுத்த வசனத்தில் கூறுகிறான் இறைவன்.

ஒரு ஆட்சிநடைபெரும் நாட்டில் இன்னொரு இன்னொரு நாட்டவர் அநியாயமாகப் போருக்கு வந்தால் அவர்களை எதிர்த்துப் போராட வேண்டும் என்பதில் என்ன தவறு? எந்த அரசாவது தன்னுடன் போருக்கு வரக் கூடியவர்களை எதிர்த்துப் போராடாதிருக்குமா? அவ்வாறு நடக்கும் போரில் எதிரிகளைக் கொல்லாது மயிலிறகால் வருடிக் கொடுக்குமா?

போர் என வந்து விட்டால் எல்லா விதமான தர்மங்களையும் தூக்கி எறிவது உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ஆனால் திருக்குர்ஆன் ‘அவர்களுடன் போரிடுங்கள்! ஆனால் வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறுபவர்களை அல்லாஹ் நேசிக்க மாட்டான்’ எனக் கூறி போர்க்களத்திலும் புதுநெறியை இஸ்லாம் புகுத்துகிறது.

நியாய உணர்விருந்தால் பாராட்டியிருக்க வேண்டிய ஒரு வசனத்தை தவறாக விமர்சனம் செய்வது நியாயம் தானா? விமர்சனம் செய்பவர்கள் சிந்திக்கட்டும்.

அல்குர்ஆன் 4:89, 4:90, வசனங்களில் போர்ப் பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் எதிரிகளை வெட்டுங்கள் எனக் கூறப்படுகிறது.

அந்தச் சமயத்தில் கூட நீங்கள் முஸ்லிமல்லாத மக்களுடன் உடன்படிக்கை செய்திருந்தால் அவ்வாறு உடன்படிக்கை செய்த மக்களுடன் எதிரிகள் சேர்ந்து விட்டால் அவர்களைக் கொல்லாதீர்கள் எனவும் அவ்வசனங்கள் கூறுகின்றன. முஸ்லிமல்லாத எத்தனையோ சமுதாயத்தவர்களுடன் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் உடன்படிக்கை செய்து அவர்களுடன் இணக்கமாக வாழ்ந்துள்ளனர்.

போர் செய்ய வந்த எதிரிகளுக்கு உடன்படிக்கை செய்தவர்கள் அடைக்கலம் கொடுத்தால் அவர்களை விட்டு விடுமாறும் இஸ்லாம் கூறுகிறது.

போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நேரத்தில் எந்த ஆட்சியாளரும் செய்வதை விட பெருந்தன்மையுடன் நடக்கக் கூறும் இவ்வசனங்களைத் தான் சிலர் தங்களின் தவறான நோக்கத்திற்குப் பயன்படுத்துகின்றனர்.

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் போர் நடக்கும் போது ‘எதிர்த்து வருவோரை சுட்டுத் தள்ளுங்கள்’ என்று இந்தியப் பிரதமர் ஆணையிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். இந்த உத்தரவுப்படி பாகிஸ்தானிய முஸ்லிம் வீரர்கள் சுட்டுத் தள்ளப்பட்டால் இந்தியா முஸ்லிம்களை கொன்று குவிக்கிறது என யாரும் கூறமாட்டார்கள். சுடப்பட்டவர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும் முஸ்லிம்கள் என்பதற்காக அவர்கள் சுடப்படவில்லை. போருக்கு வந்த எதிரிகள் என்ற காரணத்திற்காகத்தான் இவர்கள் சுடப்படுகின்றனர்.

ஆனால் இஸ்லாமிய வரலாற்றை மட்டும் இவ்வாறு புரிந்து கொள்ள மறுப்பது தான் விசித்திரமாக உள்ளது.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் ஆட்சிக்காலத்தில் தலைநகரமாம் மதீனாவிலும், அவர்கள் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் யூதர்கள் வாழ்ந்தனர். கிறித்தவர்கள் வாழ்ந்தனர். முஸ்லிமல்லாத எத்தனையோ மக்கள் வாழ்ந்தனர். அவர்களெல்லாம் கண்ட இடங்களில் வெட்டிக் கொல்லப்பட வில்லை.

இஸ்லாம் எவ்வளவு சகிப்புத் தன்மையுடைய மார்க்கம் என்பதற்கு நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் காலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியை மட்டும் தவறான எண்ணம் கொண்டவர்கள் முன் வைப்பது பொருத்தமாக இருக்கும்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மதீனா நகர் சென்றதும் இறைவனை வணங்குவதற்காக ஒரு பள்ளிவாசலைக் கட்டினார்கள். அந்தப்பள்ளி வாசலில் நபிகள் நாயக்(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் அமர்ந்திருந்த போது முஸ்லிமல்லாத ஒரு கிராமவாசி வருகிறார். பள்ளிவாசலுக்குள் நுழைந்து அதன் ஒரு மூலையில் சிறுநீர் கழிக்க ஆரம்பித்தார். இதைக் கண்ட நபித்தோழர்கள் ஆத்திரமுற்று அவரைத் தாக்கத் தயாரானார்கள். அப்போது நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ‘அவர் சிறுநீர் கழித்து முடிக்கும் வரை விட்டு விடுங்கள்’ எனக் கூறினார்கள்.

அவர் சிறுநீர் கழித்து முடிக்கும் வரை காத்திருந்து அவரை அழைத்தனர். அவரிடம் மென்மையாக ‘இது அல்லாஹ்வை வணங்குவதற்காகக் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலம். இங்கே அசுத்தம் செய்யக் கூடாது’ என்று கூறி அனுப்பினார்கள்.

பள்ளிவாசலில் சிறுநீர் கழித்தவரைக் தண்டிக்காமல் அவர்கள் விட்டு விட்டது சாதாரணமான ஒரு செயலாக யாருக்கும் தோன்றலாம். ஆனால் சிறுநீர் கழிப்பதைக் கண்டு, அவர் கழித்து முடிக்கும் வரைக் காத்திருந்து மென்மையாக அறிவுரை கூறியதைச் சாதாரணமாகக் கருதமுடியாது. இத்தகைய சகிப்புத்தன்மையை எந்த மதவாதியிடமும் காணமுடியாது.

இஸ்லாம் ஒரு கடவுளைத்தவிர வேறு யாரையும் எதனையும் வணங்கக் கூடிய கற்சிலைகளுக்கு எந்தவிதமான சக்தியும் கிடையாது என்பதிலும் இஸ்லாத்திற்கு இரண்டாவது கருத்துகிடையாது. அதற்காகப் பிறமதத்தவர்களால் வழிபாடு செய்யப்படுபவர்களை ஏசலாமா என்றால் ஏசக்கூடாது என இஸ்லாம் திட்டவட்டமாக உத்தரவிடுகிறது.

அவர்கள் அல்லாஹ்வை விடுத்து யாரைப் பிரார்த்திக்கின்றார்களோ அவர்களை நீங்கள் ஏசாதீர்கள். அவ்வாறு ஏசினால் அறியாமை காரணமாக அவர்கள் அல்லாஹ்வை ஏசுவார்கள். (அல்குர்ஆன் 6:108)

தான தர்மங்கள் செய்வதில், உதவிகள் புரிவதில் நீதியை நிலைநாட்டுவதில் முஸ்லிம் முஸ்லிமல்லாதவர் எனப்பாகுபாடு காட்டக் கூடாது எனவும் இஸ்லாம் தெளிவான கட்டளை பிறப்பிக்கிறது.

மார்க்க விஷத்தில் உங்களுடன் எதிர்த்துப் போர் புரியாதவர்களுக்கும் உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாதவர்களுக்கும் நீங்கள் நன்மை செய்வதையும் அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடுக்கவில்லை. (அல்குர்ஆன் 60:8)

விசுவாசிகளே! நீதியை நிலைநாட்டக் கூடியவராகவும் நீதிக்குச் சாட்சிகளாகவும் ஆகி விடுங்கள்! ஒரு சாரார் மீது(உங்களுக்குள்ள) வெறுப்பு(அவர்களுக்கு) நீதி செலுத்தாதிருக்கும்படி உங்களைத் தூண்டக் கூடாது. நீங்கள்(அனைவரிடமும்) நீதியாக நடந்து கொள்ளுங்கள்! அதுவே இறையச்சத்துக்கு நெருக்கமானதாகும். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவன் (அல்குர்ஆன் 5:8)

இத்தகைய மார்க்கத்தைத் தான் வன்முறை மார்க்கம் எனத் திட்டமிட்டுப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

நியாய உணர்வுடையோர் இதை உணர்வார்கள்.

நன்றி: egathuvam.blogspot.com

Thursday, March 18, 2010

மனித வாழ்வு இவ்வுலகோடு முடிவு பெற்றால்!


- அபூ ஃபாத்திமா

பகுத்தறிவற்ற எண்ணற்ற பிராணிகளைப்போல், பகுத்தறிவுள்ள மனிதனும் ஒரு பிராணியே. சிலர் சொல்லுவது போல் அவனுக்கு மறுமை வாழ்க்கை என்று ஒன்றில்லை. மனிதன் மரணிப்பதோடு அவனது வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. மற்ற பிராணிகளைப் போல் அவனும் வாழந்து மடிந்து மண்ணாகிப் போவதே அவனது இறுதி முடிவு என்பது நாத்திக நண்பர்களின் உறுதியான முடிவு.

இந்த அவர்களின் முடிவின் அடிப்படையில் எமக்குச் சில ஐயங்கள் எழுகின்றன. அவற்றைத் தீர்த்து வைப்பது அவர்களின் கடமையாகும்.

நாத்திகர்கள் தாங்கள் தான் அசலான பகுத்தறிவாளர்கள் என்று பறைசாற்றிக் கொள்வது ஊர் அறிந்த உண்மை. எனவே எமது சில பகுத்தறிவுக் கேள்விகளுக்கு விடை தருவது அவர்கள் மீதுள்ள பொறுப்பாகும். அவர்கள் தரும் பதில்களிலிருந்து அவர்கள் பகுத்தறிவுப் பாசறையிலுள்ளவர்களா? அல்லது ஐயறிவு பாசறையிலுள்ளவர்களா? என்பதை எம்போன்றவர்கள் விளங்கிக் கொள்ள முடியும்.

உலகில் காணப்படும் கோடான கோடி ஜீவராசிகளைப் போல் அதாவது புழு பூச்சிகளைப் போல் மனிதனும் ஒரு புழு -பூச்சியே - ஒரு பிராணியே ஜீவராசியே! அனைத்து உயிரினங்களும் மடிந்து மண்ணணாகிப் போவது போல் மனிதனும் மடிந்து மண்ணாகி போகின்றவன்தான். மற்றபடி அவனுக்கொரு ஆத்மாவோ, மறுமை வாழ்க்கையோ இல்லை என்பதே நாத்திகர்களின் பகுத்தறிவு வாதம். அதாவது உலக வாழ்வோடு மனித வாழ்வு முற்றுப் பெற்று விடுகிறது. அதன் பின் ஒரு தொடர்ச்சியும் இல்லை என்பதே அவர்களின் வாதம். இப்போது அவர்களின் வாதத்தில் நமக்கு ஏற்படும் ஐயங்கள் இவைதான்.

மற்ற படைப்பினங்களைப் போன்றதொரு சராசரி படைப்பினமே மனிதன் எனும் போது மற்ற படைப்பினங்களுக்குரிய சட்டங்களே மனிதனுக்கும் பொருந்த வேண்டும். மற்ற படைப்பினங்களைப் பொருத்தமட்டிலும் "வல்லனவற்றின் வாழ்வு வளம்" (Survival of the fittest) என்ற கோட்பாட்டின் அடிப்படையிலேயே அவற்றின் வாழ்வு அமைந்துள்ளது. அதாவது வலிமையுள்ளவை வலிமையற்றவற்றை வீழ்த்தி, அல்லது அழித்து தம்மை வளப்படுத்திக் கொள்கின்றன. உதாரணமாக பெரிய மீன்கள் சிறிய மீன்களைக் கொன்று தமக்கிரையாக்கி கொள்கின்றன. சிங்கம், புலி போன்றவை மான், மாடு போன்றவற்றைக் கொன்று தமக்கிரையாக்கிக் கொள்கின்றன. இந்த "வல்லனவற்றின் வாழ்வு வளம்" புழு, பூச்சியிலிருந்து, ஊர்வனவற்றிலிருந்து, நாலு கால் பிராணிகள் வரை பொருந்தும், தரையிலுள்ள பிராணிகளுக்கும் பொருந்தும். இந்த சித்தாந்தத்தை நாத்திக பகுத்தறிவாளர்கள் அநீதி என்று தீர்ப்பு அளிப்பதில்லை.

அப்படியானால், அந்த ஜீவராசிகளைப் போன்றதொரு புழு, பூச்சி-மிருகம் போன்ற ஜீவராசிதான் மனிதன் என்று நாத்திக பகுத்தறிவாளர்கள் கூறும் போது, அதே "வல்லனவற்றின் வாழ்வு வளம்" (Survival of the Fittest) என்ற சித்தாந்தம் மனிதனுக்கும் பொருந்திப் போக வேண்டுமல்லவா? மனிதர்களிலும் வலியவர்கள் வலிமை அற்றவர்களை வீழ்த்தி தங்கள் வாழ்வை வளப்படுத்திக் கொள்வதை அநீதி என்று கூற முடியுமா? இல்லை; இது அநீதி என்று நாத்திகர்கள் கூறுவார்களேயானால், எந்த அடிப்படையில் அநீதி என்று கூறுகிறார்கள்? மற்ற படைப்பினங்களைப் போன்றதொரு, மண்ணோடு மண்ணாகிப் போகும் ஒரு படைப்புத்தானே - புழு பூச்சிதானே, மிருகம் போன்றவன்தானே மனிதனும் நாத்திகர்களின் கூற்றுப்படி அப்படியானால் மற்றப் படைப்பினங்களுக்குப் பொருந்திப் போகும் "வல்லனவற்றின் வாழ்வு வளம்" (Survival of the fittest) என்ற கோட்பாடு மனிதனுக்கு மட்டும் ஏன் பொருந்திப் போகாது? இதற்குரிய சரியான விளக்கத்தை பகுத்தறிவு அடிப்படையில் தரக் கடமைப்பட்டிருக்கிறார்கள் நாத்திகர்கள். அது மட்டுமல்ல; மற்ற படைப்பினங்கள் விஷயத்தில் அது நீதியாகும்; மனிதப்படைப்பு விஷயத்தில் அது நீதியாகும்; மனிதப்படைப்பு விஷயத்தில் மட்டுமே அது அநீதியாகும் என்று பிரித்துச் சட்டம் சொன்ன அதிகாரம் பெற்ற சக்தி எது? இதற்கு பகுத்தறிவு ரீதியாக விளக்கம் தரக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

நீதிக்கும், தர்மத்திற்கும் கட்டுப்பட்டு வாழ்பவர்களில் பெரும்பாலோர் வறுமையிலும், துன்பங்களிலும் சதா உழன்று மடிகிறார்கள். அவர்கள் நீதிக்கும், தர்மத்திற்கும் உட்பட்டு வாழ்ந்ததற்குரிய நற்பலனை இவ்வுலகில் அனுபவிக்கவில்லையே! அப்படியானால் எங்கே பெறுவார்கள்?

அடுத்து வலுவில்லாதவர்கள் வலுவானவர்களை அடக்கி ஒடுக்கி தங்கள் வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்வது அநீதியே என்ற பகுத்தறிவு ரீதியாகவும் மனச்சாட்சியின் படியும் அப்பட்டமாக ஒப்புக் கொண்டிருக்கும் நாத்திகர்களில் பலர், இன்று அதற்கு மாறாக மக்களையும் அரசையும் அதிகாரிகளையும் ஏமாற்றி அல்லது லஞ்சம் கொடுத்து கோடி, கோடியாகக் கொள்ளை அடித்து உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் சொத்துக்களைக் குவித்துக் கொண்டிருக்கிறார்களே? இதற்குக் காரணம் என்ன? அவர்கள் அநீதி என்று ஒப்புக் கொண்டுள்ளதற்கு மாற்றமாக - மக்களிடம் அநீதி என்று அப்பட்டமாக அறிவிப்பதற்கு மாற்றமாக அந்த அநீதியான கொள்ளை அடிக்கும் செயலை செய்ய அவர்களைத் தூண்டும் சக்தி எது? அவர்களது பகுத்தறிவும், மனச்சாட்சியும் பாவம், அநீதி, அக்கிரமம், ஒழுக்கமற்ற செயல் என்று ஒப்புக்கொள்ளும் குடி, விபச்சாரம், சூது போன்ற தீய காரியங்களில் அவர்களில் பலர் மூழ்கி இருக்கிறார்களே? இத்தீய செயல்களைச் செய்ய அவர்களைத் தூண்டும் சக்தி எது?

இறைவனையும், மறுமையையும் உறுதியாக நம்பிக் கொண்டிருக்கும் முஸ்லிம்களோ மனிதனின் உடம்பில் இரத்தம் ஓடும் இடங்களிலெல்லாம் அவனது பகிரங்கப் பகைவனான ஷைத்தான் ஓடிக்கொண்டு மனிதனை வழிகெடுத்து நரகில் கொண்டு தள்ளி அதை நிரப்ப கங்கணம் கட்டிச் செயல்படுகிறான். அவனது வலையில் சிக்கியே மனிதன், தானே பாவம், அநீதி, அக்கிரமம், ஓழுக்கமற்ற செயல் என்று பகிரங்கமாக ஒப்புக் கொள்ளும் துர்ச்செயல்களைச் செய்து பாவியாக நேரிடுகிறது என்று கூறிவிடுவார்கள். நிச்சயமாக நாத்திகர்கள் இறைவனையும், மறுமையையும், ஷைத்தானையும் மறுப்பதால் இந்தக் காரணத்தை ஒப்புக் கொள்ளவும் மாட்டார்கள்; சொல்லவும் மாட்டார்கள். அப்படியானால் பாவம், அநீதி, அக்கிரமம், ஒழுக்கமற்ற செயல் என்று மனிதனே பகிரங்கமாக ஒப்புக்கொண்டுவிட்டு, அடுத்த கனமே அவற்றைச் செய்வதற்குரிய காரணம் என்ன? பகுத்தறிவு செய்வதற்குரிய காரணம் என்ன? பகுத்தறிவு பாதையில் பயிற்சி பெற்ற நாத்திகர்கள் அதற்குரிய காரணம் கூறக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

அடுத்து அவர்களே பாவம், அநீதி, அக்கிரமம், ஒழுக்கமின்மை என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்டு விட்டு அதற்கு மாறாக அந்த பாவமான செயல்களை, அநீதியான செயல்களை, அக்கிரமமான, ஒழுக்கமற்ற காரியங்களைச் செய்து கோடி, கோடியாக கொள்ளை அடித்து உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் குவித்து வைத்துள்ளனர். அவர்களுக்கு இன்று மக்களுக்கு மத்தியில் பெருஞ்செல்வாக்கு ஆள், அம்பு, பட்டம், பதவி, பலவித அதிகார ஆதிக்கம், அரசியல் செல்வாக்கு என்று மன்னாதி மன்னர்கள் போல் உல்லாச புரிகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவ்வுலகில் வாழ்நாள் பூராவும் அவர்கள் கொள்ளை அடித்து சேர்த்த சொத்துக்கள் அவர்களுக்கு இவ்வுலகை சுவர்க்கப்பூமியாக ஆக்கித் தருகிறது.

அவர்கள் செய்த அநீதி, அக்கிரமம், பாவச் செயல்கள், கொலை, கொள்ளைகள் இவை காரணமாக இவ்வுலகில் எவ்வித தண்டனையோ, கஷ்டமோ, துன்பமோ அனுபவிக்காமல் சுவர்க்கவாசிகள் போல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பாடையில் வைத்து மண்ணறையில் கொண்டு தள்ளும் வரை அல்லது தீயிலிட்டுப் பொசுக்கும் வரை இன்பமே இன்பம்; மற்றபடி துன்பத்தின் சாயல் கூட படாதபடி வாழ்ந்து மடிகிறார்கள். பகுத்தறிவு நாத்திகர்கள் பாவம், அநீதி, அக்கிரமம், ஒழுக்கமின்மை என்று பகிரங்கமாக ஒப்புக் கொண்ட செயல்களைச் செய்தே அவர்கள் இவ்வுலகில் குபேர வாழ்க்கையை- சொர்க்கலோக வாழ்க்கையை அடைந்தார்கள்.

ஆனால் அவர்கள் செய்து முடித்த எந்த பாவமான செயலுக்கும், அநீதியான செயலுக்கும், அக்கிரமமான செயலுக்கும், ஒழுக்கமற்ற செயலுக்கும் அணுவத்தனை கூட தண்டனையோ துன்பமோ அனுபவிக்கவில்லை. மரணத்திற்குப் பின் மனிதனுக்கு வாழ்வு உண்டு என்று உறுதியாக நம்பும் முஸ்லிம்களோ நிச்சயமாக அப்படிப்பட்டவர்கள் இவ்வுலகளில் மக்களையும், அரசுகளையும், அதிகாரிகளையும் ஏமாற்றித் தப்பிக் கொண்டாலும் இறைவனுடைய தர்பாரில் தப்பவே முடியாது. அங்கு வசமாக மாட்டிக் கொள்வார்கள். கடுமையான தண்டனைகள் அவர்களது குற்றச் செயல்களுக்குக் காத்திருக்கிறது என்று உறுதியாகச் சொல்லி விடுவார்கள். ஆனால் இறைவனையும், மறுமையையும் மறுக்கும் நாத்திகர்கள் இப்படிச் சொல்ல முடியாது.

அப்படியாயின் அவர்களின் பகுத்தறிவுக் கொள்கைப்படி இப்படிப்பட்ட பாவமான, அநீதியான, அக்கிரமமான, ஒழுக்கமற்ற செயல்களைச் செய்து வளமான வாழ்வை அமைத்துக் கொண்ட கொடியவர்கள் அதற்குரிய தண்டனையை அனுபவிப்பது எப்போது? பகுத்தறிவு ரீதியாக விடை தரக்கடமைப் பட்டிருக்கிறார்கள். ஒன்று புழு, பூச்சி, மிருகம் போன்ற படைப்பினங்களைப் போல், மனிதனும் "வல்லனவற்றின் வாழ்வு வளம்" (Survival of the fittest) என்ற கோட்பாட்டின்படி வாழக் கடமைப்பட்டவன் என்று ஒப்புக் கொள்ள வேண்டும். இல்லை அது பாவம், அநீதி, அக்கிரமம், ஒழுக்கமின்மை என்று சொன்னால் இந்த சட்டத்தை வகுத்தளித்த சக்தி எது என்பதையாவது தெளிவு படுத்த வேண்டும்.

மேலும் அவர்களே அவர்களது மனட்சாட்சிப்படி பாவம், அநீதி, அக்கிரமம், ஒழுக்கமின்மை என்று அப்பட்டமாக ஒப்புக் கொண்டுவிட்டு மறைமுகமாக அவற்றைச் செய்யத் தூண்டும் சக்தி எது என்பதையும் தெளிவு படுத்த வேண்டும். இப்படி மனட்சாட்சிக்கு விரோதமாகச் செயல்பட்டு சொத்துக்களை குவித்து உலகில் குபேர வாழ்க்கை, சொர்க்கலோக வாழ்க்கை வாழ்ந்து மடியும் சண்டாளர்கள் தங்களின் குற்றங்களுக்குரிய தண்டனைகளை அனுபவிப்பது எப்போது? எங்கே? என்பதையும் தெளிவு படுத்த வேண்டும். இந்த எமது சந்தேகங்களுக்கெல்லாம் பகுத்தறிவு ரீதியான விளக்கங்களை அவர்கள் தரவேண்டும், அப்படியானால் மட்டுமே அவர்களைப் பகுத்தறிவுப் பாசறையில் பயிற்சி பெற்றவர்களாக உலகம் ஒப்புக் கொள்ளும். இல்லை என்றால் புறக்கண்ணால் பார்த்தே கடவுளை, மறுமையை ஏற்பேன் என்ற ஐயறிவு வாதத்தையே அவர்கள் முன் வைக்கிறார்கள் என்ற முடிவுக்கே முறையான பகுத்தறிறவை- நுண்ணறிவை உடையவர்கள் வர நேரிடும்.

பாவமான, அநீதமான, அக்கிரமமான, ஒழுக்கமற்ற செயல்களைச் செய்கிறவனின் மனச்சாட்சியே அவனைக் கொள்ளாமல் கொன்று கொண்டிருக்கும்; அதுவே அவனுக்குரிய தண்டனையாகும் என்ற பிதற்றலான, மழுப்பலான, நழுவலான பதிலை அவர்களிடமிருந்து நாம் எதிர்பார்க்கவில்லை. காரணம் இந்த வாதம் உண்மையானால், இவ்வுலகிலும் அதே வாதப்படி அக்குற்றச் செயல்களுக்கு அரசுகளும் எவ்விதத் தண்டனையும் அளிக்கக் கூடாது. அவர்களின் மனட்சாட்சியே அக்கயவர்களை கொல்லாமல் கொள்வதே போதுமானதாகும் என்பதையும் நாத்திகர்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்? எதைச் சரிகாணப்போகிறார்கள் நாத்திகர்கள்?


நன்றி: Readislam.net