Monday, April 12, 2010

அல்குர்ஆன் இற‌க்கி அருளப்பட்டதா? படைக்கப்பட்டதா?

அழ் ஹாபிழ் அபூ அஸ்பாக் அல் அதரி
abuashfaqalathary@gmail.com

”மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்குச் சான்று வந்துள்ளது. உங்களிடம் தெளிவான ஒளியையும் அருளியுள்ளோம்.’ (அல் குர்ஆன் 4:174)

மனித குலத்தின் ஈருலக வெற்றிக்கு கருவாக இருக்கின்ற திருமறைக் குர்ஆன் ஜாஹிலிய்யா காலம் தொட்டு இன்றைய நவீனகாலம்வரை ஏற்படுத்திய மாற்றங்களையும், சாதித்த சாதனைகளையும் எழுத ஆரம்பித்தால் பேனாவின் மைக்குப்பிகள் முடிவுற்றுவிடும். மனித வரலாற்றில் சாதனை படைத்த சாதனையாளர்களின் பின்னணியில் தாக்கம் செலுத்துவது அல்குர்ஆனின் அறிவூட்டல்தான் என்பதை அறிந்துகொள்ள முடியும்.

இத்தகைய புனிதமிகு வேதம் எவ்வாறு இவ்வுலகிற்கு வருகை தந்தது என்பதில் மனித சமூகத்தில் இரு விதமான கோட்பாடுகள்காணப்படுகின்றன. இவற்றில் முஸ்லிம்களாகிய நாம் எதனை கடைப்பிடிக்க வேண்டும் என்பது தொடர்பாக இக்கட்டுரை அலசவிருக் கின்றது. இவற்றில் பூரண தெளிவில்லாமல் நாம் வணக்க வழிபாடுகளை மேற்கொள்வது உப்பில்லா பண்டம் குப்பையில் என்ற பழமொழிக்கு ஒத்ததாகத்தான் இருக்கும். அவைகளை பரத்தப்பட்ட புழுதிகளாகவே நாளை மறுமையில் நாம் காண்போம்.

எனவே அல்குர்ஆனை படிப்பதற்கு முன் அதன் வருகை பற்றிய பூரண தெளிவை ஏற்படுத்திக்கொள்வது பொருத்தமென கருதுகின்றேன்.

முஸ்லிம்களாகிய நாம், திருமறைக்குர்ஆன், அருள்புரியப்பட்ட மகத்துவமிக்க இரவை தன்னகத்தே கொண்டுள்ள ரமழான் மாத்தில் இறக்கியருளப்பட்டது எனும் நம்பிக்கைகோட்பாட்டில் வாழ்ந்து வருகின்றோம். அன்றைய ஜாஹிலிய சமூகத்திடம் மூட நம்பிக்கைகள், பெண் குழந்தைகளை குழி தோண்டிப் புதைப்பது இளம்பெண்களை ஆடு மாடுகளைப் போன்று நடத்துவது, மதுபாணங்களை அருந்துவது,தந்தை இறந்து விட்டால் தந்தையின் மனைவியோடு மகன்சேர்வது, நிர்வாணமாக நின்று கடவுள் ஆராதனைகளை மேற்கொள்வது, இன, மத வேறுபாடுகள் பார்ப்பது போன்ற இன்னும் பல தீய குணங்கள் மேலோங்கிக் காணப்பட்டது.

இத்தகைய இழி நிலைகளை அவதானித்துக் கொண்டிருந்த முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இவற்றில் தானும் பங்காளியாகிவிடக் கூடாது என்பதற்காக மக்காவிற்கு வெளியே உள்ள ‘ஹிறா’ எனும் குகைக்குச் சென்று இவற்றிற்கான மாற்று வழிகளை சிந்திக்கலானார்கள்.

பல நாட்களுக்கான உணவுகளை தயார்படுத்திக்கொண்டு அங்கேயே தங்கியிருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் வானத்தையும், பூமியையும் தொட்டுக்கொண்டிருக்கும் அளவுக்கு பிரமாண்டமான தோற்றத்தில் ஜிப்ரீல் எனும் மலக்கு திடீரென நபிகளாரை கட்டியணைத்து ‘ஓதுவீராக’ எனக் கூறிய போது தமக்கு ஓதத்தெரியாது என நபியவர்கள் சொல்ல மீண்டும் ‘ஓதுவீராக’ எனக்கூற அப்போதும் தெரியாது என பதிலளித்தார்கள். பிறகு நபியவர்களை மிகவும் இறுக்கமாக கட்டியணைத்துக் கொண்டு அல் குர்ஆனின் 96வது அத்தி யாயத்தில் இடம் பெறும் முதல் ஐந்து வசனங்களையும் ஓதிக் காண்பித்தார்கள்.

நபியவர்கள் அதிர்ச்சியுற்று அச்சம் கொண்டவர்களாக தனது மனைவி ஹதீஜாவிடம் வந்து விடயத்தைக் கூறினார்கள். ‘இறைவன் நிச்சயமாக உங்களை இழிவு படுத்தமாட்டான், நீங்கள் உறவுகளை சேர்ந்து வாழுகின்றீர்கள், ஏழைகளுக்கு வாரி வழங்கு கின்றீர்கள், மக்களுக்கு உதவுகின்றீர்கள். எனவே, அழ்ழாஹ் உங்களை கைவிடமாட்டான்’ என ஆறுதல் வார்த்தைகளை கூறினார்கள். பிறகு முந்தைய வேதங்களை திறம்பட கற்றறிந்த தனது உறவினர் வரகாவிடம் நபிகளாரை அழைத்துச் சென்று விடயத்தை முறையிட்டார்கள.

அவர் ‘நீர் இறைவனின் தூதராக நியமிக் கப்பட்டுள்ளீர், உம்மை உமது சமுதாயத்தினர் ஊரை விட்டு வெளியேற்றும் நிலையை நீர் அடைவீர். ஏனெனில் இதுதான் முன்சென்ற இறைத் தூதர்களின் நிலை என்றெல்லாம் ஆறுதல் படுத்தினார்கள்.’ (நூல்: புஹாரி-3)

இவ்வாறே நபிகளாருக்கு இறைச் செய்தி கொடுக்கப் பட்டது. இவ்வாறு ஆரம்பித்த வஹி 23 வருடங்களாக சிறிது சிறிதாக இறக்கி அருளப்பட்டது. இந்த வருகையைக் குறித்து அருள்மறை அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.

‘ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்ட தாகவும் (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் இறக்கியருளப்பட்டது.’ (அல்குர்ஆன் 1:185).

மற்றுமொரு வசனத்தில் ‘இதனை நாம் அருள் பாலிக்கப்பட்ட இரவில் இறக்கி வைத்துள்ளோம்.’ (அல்குர்ஆன் 44:2). பிறிதொரு வசனத்தில் ‘இதனை (குர்ஆனை) மகத்துவமிக்க இரவில் இறக்கி அருளி யுள்ளோம்.’ (அல்குர்ஆன் 97:1).

மேற் கூறப்பட்ட வசனங்களை பார்க்கும் போது அல்குர்ஆனின் வருகையில் ஏதோ முரண்பாடு இருப்பது போன்று தோன்றுகிறது. சிலர் அவ்வாறு சித்தரித்தும் உள்ளனர். எனினும் உண்மையில் இவற்றில் எவ்வித முரண்பாடும் கிடையாது.

அல்குர்ஆன் 44:2ல் கூறப்படுகின்ற அருள்பாலிக்கப்பட்ட இரவு என்பது லைலதுல் கத்ர் எனும் மகத்துவமிக்க இரவு என்பதை அல்குர்ஆன் 97:1ஆம் வசனம் தெளிவுபடுத்துகிறது. இந்த மகத்துவமிக்க இரவு ரமழான் மாதத்தில் உள்ளது என்பதை அல்குர்ஆன் 185:1ஆம் வசனம் உணர்த்தி நிற்கின்றது. எனவே இம்மூன்று வசனங்களையும் கூர்ந்து கவனிக்கும் போது ஒன்றுக்கொன்று விளக்கமாக அமைந்துள்ளதே தவிர முரண்பாடுகள் கிடையாது என்பதை எம்மால் விளங்கிக்கொள்ள முடிகின்றது.

அடுத்து மற்றுமொரு சந்தேகமும் எழ வாய்ப்பு உள்ளது. அதாவது ரமழான் மாதத்தில் ‘லைலதுல் கத்ர்’ எனும் இரவில் அருள்மறை இறக்கியருளப்பட்டதென்றால் ஏனைய காலங்களில் இறக்கியருளப்படவில்லையா? 23 வருடங்களாக சிறிது சிறிதாக இறக்கியருளப்பட்டது என்பதுதானே இஸ்லாமிய வரலாறு கூறும் உண்மை?

உண்மையில் இது ஒரு நியாயமான கேள்வியாகும். எனினும் அல்குர்ஆனின் வருகை குறித்து உள்ள அடிப்படையில் எமக்கு தெளிவு கிடைக்குமாயின் இச்சந்தேகம் எழ வாய்ப்பே இல்லை. திருமறைக் குர்ஆனுக்கு இரு விதமான வருகைகள் உள்ளன.

நன்றி : http://dharulathar.com

வீட்டுக்கும் குஷ்டரோகம் வருமாம்! - பைபிள் ஜோக்ஸ்

பைபிளில் முரண்பாடான வசனங்கள், ஆபாசமான வசனங்கள் என்று இருப்பது போன்று ஜோக்கான வசனங்களும் நிறைய கானக்கிடைக்கின்றன.

நாம் உடுத்தும் ஆடைகளுக்கு குஷ்டரோகம் வரும் என்று உளரிவைத்தவர்கள் அடுத்து வீட்டுக்கும் குஷ்டரோகம் வரும் என்று கடவுளின் பெயரால் பைபிளில் உளரிவைத்துள்ளதைப் பாருங்கள்:

நான் உங்களுக்குக் காணியாட்சியாகக் கொடுக்கும் கானான் தேசத்திலே நீங்கள் போய்ச் சேர்ந்தபின்பு, உங்கள் காணியாட்சியான தேசத்தில் ஒரு வீட்டிலே குஷ்டதோஷத்தை நான் வரப்பண்ணினால், அந்த வீட்டிற்கு உடையவன் வந்து, வீட்டிலே தோஷம் வந்திருக்கிறதாகத் தோன்றுகிறது என்று ஆசாரியனுக்கு அறிவிக்கக்கடவன். அப்பொழுது வீட்டிலுள்ள யாவும் தீட்டுப்படாதபடிக்கு, ஆசாரியன் அந்தத்தோஷத்தைப் பார்க்கப் போகுமுன்னே வீட்டை ஒழித்துவைக்கும்படி சொல்லி, பின்பு வீட்டைப் பார்க்கும்படி போய், அந்தத் தோஷம் இருக்கிற இடத்தைப் பார்க்கக்கடவன். அப்பொழுது வீட்டுச் சுவர்களிலே கொஞ்சம் பச்சையும் கொஞ்சம் சிவப்புமான குழி விழுந்திருந்து, அவைகள் மற்றச் சுவரைப்பார்க்கிலும் பள்ளமாயிருக்கக் கண்டால், ஆசாரியன் வீட்டைவிட்டுப் புறப்பட்டு வாசற்படியிலே வந்து, வீட்டை ஏழுநாள் அடைத்துவைத்து, ஏழாம்நாளிலே திரும்பப் போய்ப்பார்த்து, தோஷம் வீட்டுச் சுவர்களில் படர்ந்ததென்று கண்டால், தோஷம் இருக்கும் அவ்விடத்துக் கல்லுகளைப் பெயர்க்கவும், பட்டணத்துக்குப் புறம்பே அசுத்தமான ஒரு இடத்திலே போடவும் அவன் கட்டளையிட்டு, வீட்டை உள்ளே சுற்றிலும் செதுக்கச்சொல்லி, செதுக்கிப்போட்ட மண்ணைப் பட்டணத்துக்குப் புறம்பே அசுத்தமான ஒரு இடத்திலே கொட்டவும், வேறே கல்லுகளை எடுத்துவந்து, அந்தக் கல்லுகளுக்குப் பதிலாகக் கட்டி, வேறே சாந்தை எடுத்து வீட்டைப்பூசவும் கட்டளையிடுவானாக. கல்லுகளைப் பெயர்த்து, வீட்டைச் செதுக்கி, நவமாய்ப் பூசினபின்பும், அந்தத் தோஷம் திரும்ப வீட்டில் வந்ததானால், ஆசாரியன் போய்ப் பார்க்கக்கடவன். தோஷம் வீட்டில் படர்ந்ததானால், அது வீட்டை அரிக்கிற குஷ்டம். அது தீட்டாயிருக்கும். ஆகையால் வீடுமுழுவதையும் இடித்து, அதின் கல்லுகளையும், மரங்களையும், அதின் சாந்து எல்லாவற்றையும் பட்டணத்துக்குப் புறம்பே அசுத்தமான இடத்திலே கொண்டுபோகவேண்டும். வீடு அடைக்கப்பட்டிருக்கும் நாட்களில் அதற்குள் பிரவேசிக்கிறவன் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான். அந்த வீட்டிலே படுத்தவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன். அந்த வீட்டிலே சாப்பிட்டவனும் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன். ஆசாரியன் திரும்பவந்து, வீடு பூசப்பட்டபின்பு வீட்டிலே அந்தத் தோஷம் படரவில்லை என்று கண்டானேயாகில், தோஷம் நிவிர்த்தியானபடியால், ஆசாரியன் அந்த வீட்டைச் சுத்தம் என்று தீர்க்கக்கடவன். அப்பொழுது வீட்டிற்குத் தோஷங்கழிக்க, இரண்டு குருவிகளையும், கேதுருக்கட்டையையும், சிவப்புநூலையும், ஈசோப்பையும் எடுத்து, ஒரு குருவியை ஒரு மண்பாண்டத்திலுள்ள ஊற்றுநீரின்மேல் கொன்று, கேதுருக்கட்டையையும், ஈசோப்பையும், சிவப்புநூலையும், உயிருள்ள குருவியையும் எடுத்து, இவைகளைக் கொல்லப்பட்ட குருவியின் இரத்தத்திலும் ஊற்று நீரிலும் தோய்த்து, வீட்டின்மேல் ஏழுதரம் தெளித்து, குருவியின் இரத்தத்தினாலும், ஊற்றுநீரினாலும், உயிருள்ள குருவியினாலும், கேதுருக்கட்டையினாலும் ஈசோப்பினாலும், சிவப்புநூலினாலும் வீட்டிற்குத் தோஷங்கழித்து, உயிருள்ள குருவியைப் பட்டணத்துக்குப் புறம்பே வெளியிலே விட்டுவிட்டு, இப்படி வீட்டிற்குப் பிராயச்சித்தம் செய்யக்கடவன். அப்பொழுது அது சுத்தமாயிருக்கும். இது சகலவித குஷ்டரோகத்துக்கும், சொறிக்கும், வஸ்திரக் குஷ்டத்துக்கும், வீட்டுக் குஷ்டத்துக்கும், . தடிப்புக்கும், அசறுக்கும், வெள்ளைப்படருக்கும் அடுத்த பிரமாணம். குஷ்டம் எப்பொழுது தீட்டுள்ளது என்றும், எப்பொழுது தீட்டில்லாதது என்றும் தெரிவிப்பதற்குக் குஷ்டரோகத்துக்கு அடுத்த பிரமாணம் இதுவே என்றார். ( லேவியராகமம் 14:34-57 )

கடவுளுடைய சட்டங்களை எப்படிப்பட்ட மடத்தனமான சட்டங்களாக சித்தரித்திருக்கின்றார்கள் என்று பார்த்தீர்களா சகோதரர்களே! மேலே சொன்னது போல் வீட்டுக்கு குஷ்டரோகம் வரும், ஆடைகளுக்கு குஷ்டரோகம் வரும் என்று வேறு எவராவது சொன்னால் 'இவனுக்கு பைத்தியம் பிடித்துள்ளது' என்று சொல்லும் நாம், அதை விட மிக மிக மடத்தனமாக - முட்டாள்தனமாக உளரும் இந்த பைபில் வசனங்களை மட்டும், இந்த அண்ட சராசரங்களை எல்லாம் படைத்து பரிபாலித்துவரும் இறைவனின் வார்த்தைகள்' என்று எப்படி நம்பமுடியும்? சிந்திக்க வேண்டாமா?
உலகிலேயே அதிகமான நாத்திகர்களை உண்டாக்கிய மதம் எதுவென்றால் அது கிறிஸ்தவமே! காரணம் இது போண்ற மடத்தனமான பைபிள் வசனங்களே! கடவுளே இப்படியெல்லாம் போதிப்பாரா? என்று அவர்கள் தங்கள் சிந்தனையை சுழற்றும்போது தான் 'கடவுளே இல்லை' என்ற நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகின்றார்கள். இது போன்ற வசனங்களைப் பார்த்து யாருக்குத்தான் சந்தேகம் வராது சகோதரர்களே!

வீட்டுக்கு குஷ்டரோகம் வந்தால் அந்த இடம் கலர் கலாரா இருக்குமாம், மற்ற சுவர்களைக் காட்டிலும் வித்தியாசமாக இருக்குமாம், வீட்டுக்கு வந்த அந்த நோயை கண்டுபிடிப்பதற்கான டாக்டர்கள் ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்த ஆசாரியர்களாம், அவர்களிடம் தான் ட்ரீட்மென்ட எடுக்கச் சொல்லி முறையிட வேண்டுமாம், அப்படி வீட்டுக்கு குஷ்டம் வந்தது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த வீட்டை ஏழு நாள் அடைத்து வைக்க வேண்டுமாம், குஷ்ட ரோகம் வந்த அந்த வீட்டில் பெயர்த்தெடுக்கப்பட்ட கற்களை அசுத்தமான இடத்தில் தான் போடவேண்டுமாம், வீட்டு குஷ்டரோக டாக்டர்களான ஆசாரியன் அதற்கான ட்ரீட்மென்ட் எடுத்தும், அதையும் மீறி குஷ்டரோகம் வந்தது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த வீட்டையே இடித்து அந்த கல்லையும், மரங்களையும் ஊருக்கு வெளியே அசுத்தமான இடத்தில் போடவேண்டுமாம், அப்படி குஷ்டம் வந்த வீட்டுக்குள் எவனாவது சென்றிருந்தால் அவனுக்கு மாலை வரை தீட்டாம், அவன் உடுத்தின உடைகளை கழுவவேண்டுமாம், அந்த வீட்டில் எவனாவது சாப்பிட்டிருந்தால் அவனும் தனது உடையை கழுவவேண்டுமாம், இதை எல்லாம் மீறி அந்த வீட்டுக்கான தோஷம் கழிக்கிறதற்கு சில வழிமுறைகளும் இருக்கின்றதாம்; என்று இப்படி ஜோக்குகள் அடுக்கிக்கொண்டே போகின்றது...

விஞ்ஞானம் வளர்ந்த இந்த இருபதாம் நூற்றாண்டில், பைபிளின் இந்த அற்புதமான கண்டுபிடிப்பை யாராவது நிரூபிக்க முடியுமா? இதை எல்லாம் எப்படி இறைவனின் வசனங்கள் என்று நம்பமுடியும்? சிந்தித்துப் பாருங்கள் கிறிஸ்தவர்களே!

இதே போல் அநேக தமாஷான சட்டங்களும், குறிப்பாக மக்களை மடையர்களாக்கி அதன் மூலம் பிழைப்பு நடத்தும் புரோகிதர்களான - குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்த - ஆசாரியர்களுக்கு பிஸினஸ் (Business) வாய்ப்புகளுக்கான வழிகளும் லேவியராகமத்தில் மட்டுமல்லாது பைபிளின் பல இடங்களிலும் காணப்படுகின்றது. இவை அனைத்தையும் கடவுளே போதித்ததாக யூத புரோகிதர்கள் எண்ணற்ற பொய்யான சட்டங்களை எழுதிவைத்துள்ளனர். இறைவன் நாடினால், அந்த அத்தனை தவறுகளும் தொடர்ந்து எமது தளத்தில் வெளிவரும்.

அவர்களில் (இஸ்ரவேலர்களில்) ஒரு பகுதியினர் உள்ளனர். வேதத்தில் இல்லாததை வேதம் என்று நீங்கள் நினைக்க வேண்டும் என்பதற்காக வேதத்தை வாசிப்பது போல் தமது நாவுகளை வளைக்கின்றனர். 'இது இறைவனிடம் இருந்து வந்தது' எனவும் கூறுகின்றனர். அது இறைவனிடம் இருந்து வந்ததல்ல. அறிந்து கொண்டே இறைவனின் பெயரால் பொய் கூறுகின்றனர். (அல்குர்ஆன் 3:78)

நன்றி: egathuvam.blogspot.com .